அல்ட்ராஒய்லெட் 'ஷாக்வேவ்' இ.வி., பைக்கில் '2 - ஸ்ட்ரோக்' செயல்திறன்
அல்ட்ராஒய்லெட் 'ஷாக்வேவ்' இ.வி., பைக்கில் '2 - ஸ்ட்ரோக்' செயல்திறன்
அல்ட்ராஒய்லெட் 'ஷாக்வேவ்' இ.வி., பைக்கில் '2 - ஸ்ட்ரோக்' செயல்திறன்
ADDED : மார் 19, 2025 08:37 AM

'அல்ட்ராஒய்லெட்' நிறுவனம், 'ஷாக்வேவ்' என்ற எடை குறைந்த மின்சார டர்ட் பைக்கை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த பைக்கின் முன்பதிவு துவங்கி உள்ளது, வினியோகம் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் துவங்க உள்ளது.
பழைய '2 - ஸ்ட்ரோக்' இன்ஜின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள மின்சார பைக் ஆகும். வெறும் 120 கிலோ எடை உள்ள இந்த பைக், 14.7 ஹச்.பி., பவரையும், பின்புற சக்கரங்களுக்கு 505 என்.எம்., டார்க்கையும் அனுப்புவதால், வெறும் 2.9 வினாடியில் 60 கி.மீ., வேகத்தை எட்டுகிறது. பேட்டரி ஆற்றல் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை, ஆனால், ஒரு சார்ஜில் 165 கி.மீ., வரை பயணிக்கலாம் என, இந்நிறுவனம் கூறுகிறது.
கரடுமுரடான நிலப்பரப்புகள், மலைப்பாதைகள் உள்ளிட்ட பகுதிகளை எளிதாக கடக்கும் வகையில், 37 எம்.எம்., முன்புற யூ.எஸ்.டி., போர்க்மற்றும் பின்புற மோனோஷாக் சஸ்பென்ஷன் கள் வழங்கப்பட்டுள்ளன. 19 மற்றும் 17 அங்குல சக்கரங்கள், 270 எம்.எம்., மற்றும் 220 எம்.எம்., டிஸ்க் பிரேக்குகள், எல்.இ.டி., லைட்டுகள், அடாஸ் எச்சரிக்கை உள்ளிட்ட அம்சங்கள் இதில் உள்ளன.