பி.எம்.டபுள்யூ., சி 400 ஜி.டி., 'அப்டேட்டட்' மேக்ஸி ஸ்கூட்டர்
பி.எம்.டபுள்யூ., சி 400 ஜி.டி., 'அப்டேட்டட்' மேக்ஸி ஸ்கூட்டர்
பி.எம்.டபுள்யூ., சி 400 ஜி.டி., 'அப்டேட்டட்' மேக்ஸி ஸ்கூட்டர்
ADDED : மார் 12, 2025 08:49 AM

'பி.எம்.டபுள்யூ.,' நிறுவனம், அதன் 'சி 400 ஜி.டி.,' மேக்சி ஸ்கூட்டரை புதுப்பித்து, அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஸ்கூட்டர், 'பிளாக்ஸ்டார்ம்' மற்றும் 'எக்ஸ்க்லுாசிவ்' என இரு வகையில் வந்துள்ளது.
டிசைன் மாற்றம் பெரிதாக இல்லை என்றாலும், உமிழ்வை குறைக்க எக்ஸ்சாஸ்ட் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள 350 சி.சி., லிக்விட் கூல்டு இன்ஜின், யூரோ 5 பிளஸ் விதிமுறைகளுக்கு ஏற்றவாறு மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதில், 10.25 அங்குல டி.எப்.டி., டிஸ்ப்ளே, கார்னரிங் ஏ.பி.எஸ்., டிராக் ஷன் கன்ட்ரோல், இன்ஜின் பிரேக்கிங் கன்ட்ரோல் உள்ளிட்டவை அடிப்படை அம்சங்களாக மாற்றப்பட்டுள்ளன. ஸ்கூட்டர் வழுக்காதவாறு, பின் சக்கரங்களுக்கு கூடுதல் டார்க் வழங்கும், இன்ஜின் டிராக் டார்க் கன்ட்ரோல் அமைப்பு புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
அத்துடன், 10 எம்.எம்., குறைக்கப்பட்ட, 765 எம்.எம்., சீட் உயரம், 37.6 லிட்டர் பூட் ஸ்பேஸ், 4.5 லிட்டர் முன்புற சேமிப்பு ஆகியவை உட்புற இடத்தை அதிகரிக்க செய்யப்பட்டுள்ள மாற்றங்கள். அட்ஜஸ்டபில் விண்ட் வைசர், சாவி இல்லாமல் ஸ்டார்ட் செய்யும் வசதி, எல்.இ.டி., லைட்டுகள் ஆகியவை இதில் உள்ளன.