கருப்பு எடிஷனில் டொயோட்டா பிக்கப் டிரக்
கருப்பு எடிஷனில் டொயோட்டா பிக்கப் டிரக்
கருப்பு எடிஷனில் டொயோட்டா பிக்கப் டிரக்
ADDED : மார் 12, 2025 08:51 AM

'டொயோட்டா' நிறுவனம், அதன் 'ஹைலக்ஸ்' பிக்கப் டிரக்கை கருப்பு எடிஷனில் அறிமுகப்படுத்தி உள்ளது. இது கருப்பு எடிஷனில் வரும் முதல் பிக்கப் டிரக் ஆகும்.
இந்த காரின் முன்பதிவு ஆரம்பமான நிலையில், வினியோகம் இந்த மாதம் முதல் துவங்குகிறது. இந்த எடிஷன், டீசல் இன்ஜின், ஆட்டோ கியர் பாக்ஸ் கொண்ட உயர்ந்த விலை மாடலில் மட்டுமே வழங்கப்படுகிறது.
சாதாரண ஹைலக்ஸ் பிக்கப் டிரக் உடன் ஒப்பிடுகையில், கார் முழுவதும் கருப்பு நிறத்தில் உள்ளது. மேலும், குரோம் அலங்காரம் உள்ள கிரில், கைப்பிடி, வெளிப்புற பின் கண்ணாடி, அலாய் சக்கரங்கள் ஆகியவையும் கருப்பு நிறத்தில் மாற்றப்பட்டுள்ளன. கூடுதலாக, வீல் ஆர்சுகள், முன்புற மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட்டுகள், உட்புற டேஷ் போர்டு மற்றும் கேபின் ஆகியவையும் முழு கருப்பு நிறமாக உள்ளன.
மற்றபடி, இன்ஜின், கியர்பாக்ஸ், இதர அமைப்புகள் மற்றும் அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை.