பனிகாலே வி4 ஸ்போர்ட்ஸ் பைக் டுகாட்டியின் 'ரெட் ப்யூரி'
பனிகாலே வி4 ஸ்போர்ட்ஸ் பைக் டுகாட்டியின் 'ரெட் ப்யூரி'
பனிகாலே வி4 ஸ்போர்ட்ஸ் பைக் டுகாட்டியின் 'ரெட் ப்யூரி'
ADDED : மார் 12, 2025 08:46 AM

'டுகாட்டி' நிறுவனம், அதன் 'பனிகாலே வி4' ஸ்போர்ட்ஸ் பைக்கை மேம்படுத்தி, அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த பைக், 'வி4' மற்றும் 'வி4 எஸ்' என இரு மாடல்களில் வந்துள்ளது.
இந்த பைக்கின் அதிவேக திறன் மற்றும் கட்டுபாடு மேம்படுத்தப்பட்டு, ஆரம்ப பிக்கப் குறைக்கப்பட்டுள்ளது. காற்றை எளிதாக கிழித்து, அதிக கீழ் அழுத்தத்தை வழங்கும் வகையில் வெளிப்புற வீங்லேட்ஸ் மறு சீரமைக்கப்பட்டு, வெளிப்புற டிசைன் மாற்றப்பட்டுள்ளது.
இதில் உள்ள 1,103 சி.சி., வி4 இன்ஜின் 'யூரோ 5 பிளஸ்' விதிமுறைக்கு ஏற்றவாறு மேம்படுத்தப்பட்டு, செயல்திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்ஜின் பவர் 0.5 ஹெச்.பி., உயர்த்தப்பட்டு, டார்க் 2.7 என்.எம்., குறைக்கப்பட்டுள்ளது.
ஸ்போர்ட்ஸ் பைக்கில் அதிகம் பயன்படுத்தப்படும், 'சிங்கிள் சைட்' ஸ்விங்ஆர்ம் அமைப்புக்கு பதிலாக, அலுமினியத்தால் ஆன 'டபுள் சைட்' ஸ்விங்ஆர்ம் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இரு மாடல் பைக்குகளுக்கு அட்ஜெஸ்டபிள் சஸ்பென்ஷன்கள் வழங்கப்படுகிறது. எடை குறைந்த சக்கரங்கள், சஸ்பென்ஷன் மற்றும் ஸ்விங்ஆர்ம் அமைப்பு ஆகியவை பைக்கின் எடையில் 2.70 கிலோ குறைத்துள்ளது.
அதிவேகத்தில், அதிக பிரேக் குளிர்ச்சியை வழங்கும் புதிய பிரீமோ பிரேக் கேலிப்பர்கள், 17 அங்குல சக்கரங்கள், பிரெலி காம்பவுண்ட் டயர்கள், 6.9 அங்குல டி.எப்.டி., டிஸ்ப்ளே, காம்பி பிரேக்கிங் அமைப்பு, குயிக் ஷிப்டர் வசதி உள்ளிட்ட அம்சங்கள் இந்த பைக்கில் உள்ளன. பாதுகாப்புக்கு, டூயல் சேனல் ஏ.பி.எஸ்., டிராக் ஷன் கன்ட்ரோல், வீலி கன்ட்ரோல், லாஞ்ச் கன்ட்ரோல், வாகன செயல்திறனை கண்காணிக்கும் சென்சார்கள் ஆகியவை உள்ளன.