ADDED : ஜூலை 24, 2024 11:14 AM

'ஆடி' நிறுவனம், அதன் 'ஏ-4' செடான் காருக்கு பதிலாக 'ஏ - 5' காரை உலக அளவில் அறிமுகப்படுத்தி உள்ளது.
இதன் பெயரில் எண் மாற்றத்திற்கு முக்கிய காரணமாக, மின்சார கார்களுக்கு 2, 4, 6, 8 என்ற எண்களையும், இன்ஜின் கார்களுக்கு 1, 3, 5, 7 என்ற எண்களையும் பயன்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏ-5 கார், நவீன டிசைனிலும், 'ப்ரீமியம் பிளாட்பார்ம் கம்ப்ரஷன்' என்ற புதிய உருவாக்கு தளத்திலும் கட்டமைக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'பென்ஸ் சி-கிளாஸ்' மற்றும் 'பி.எம்.டபுள்யு., 3 சீரிஸ்' கார்களுடன் போட்டி போடுகிறது ஏ-5 கார்.