எக்ஸ் - ட்ரைல் எஸ்.யூ.வி., கம்பேக் கொடுக்கும் நிஸான்
எக்ஸ் - ட்ரைல் எஸ்.யூ.வி., கம்பேக் கொடுக்கும் நிஸான்
எக்ஸ் - ட்ரைல் எஸ்.யூ.வி., கம்பேக் கொடுக்கும் நிஸான்
ADDED : ஜூலை 24, 2024 11:12 AM

'நிஸான் மோட்டார்' நிறுவனம், அதன் நான்காம் தலைமுறை 'எக்ஸ் - ட்ரைல்' எஸ்.யூ.வி., காரை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏழு சீட்டர் காரான இது, 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், பிரண்ட் வீல் டிரைவ் மற்றும் சி.வி.டி., ஆட்டோ கியர் பாக்ஸ் உடன் மட்டுமே வருகிறது.
இந்த கார், இந்தியாவிற்கு புதிதல்ல. ஏற்கனவே, 2005ம் ஆண்டில், இதன் முதல் தலைமுறை கார் இங்கு அறிமுகமானது.
இந்த காரில், உலகின் முதல் 'வேரியபில் கம்ப்ரஷன் டர்போ மைல்டு ஹைபிரிட்' இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, அதிக பவர் மற்றும் மைலேஜ் கிடைக்கும் என நிஸான் நிறுவனம் கூறுகிறது.
இந்த கார் ஜப்பானில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுவதால், இதன் விலை அதிகமாக இருக்கும்.
போட்டியாளர்களை விட குறைந்த எல்க்ட்ரானிக் அம்சங்கள், பேப்ரிக் அதிகம் கொண்ட கேபின் ஆகியவை காரின் விலையை குறைக்க உதவும். மற்றபடி, உலகத்தரத்தில் இதன் கட்டமைப்பு இருக்கும் என நம்பப்படுகிறது.
எதிர்பார்ப்பு விலை - ரூ.30 - ரூ.40 லட்சம்