ADDED : ஜன 08, 2025 08:28 AM

'யமஹா' பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு சிறப்பு பொங்கல் சலுகை வழங்கப்படுகிறது. அதாவது, குறைந்த முன்பணம் முதல் வாகன சலுகை வரை முக்கிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. யமஹாவின் 'எப்.இசட்.,' சீரிஸ் பைக்குகள், 'ரே' மற்றும் 'பேசினோ' ஸ்கூட்டர்களுக்கு 4,000 ரூபாய் சலுகை வழங்கப்படுகிறது.
அத்துடன், எப்.இசட்., சீரிஸ் பைக்குகளுக்கு குறைந்த முன்பணமாக 4,999 ரூபாயும், ரே மற்றும் பேசினோ ஸ்கூட்டர்களுக்கு குறைந்த முன்பணமாக 999 ரூபாயும் செலுத்தி வாகனங்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த பொங்கல் சலுகை குறைந்த காலத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது.