/வாராவாரம்/சித்ரா...மித்ரா (திருப்பூர்)/ ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை

அவர் ஏதும் அறியாரடிஞானத் தங்கமே
''சித்ராக்கா... தாராபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளரா துரைசாமிங்கறவரை நியமிச்சிருக்காங்க... மாம்பாடி, அலங்கியம், மணக்கடவுன்னு சில ஊராட்சிகள்ல கட்சியினர் மத்தியில் இவரோட நியமனத்துக்கு எதிர்ப்பு எழுந்திருக்காம்.
நாலும் நடந்து முடிந்த பின்னால்நல்லது கெட்டது தெரிந்ததடா...
'சித்ராக்கா... ஹெச்.எம்.,கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் ஆபீஸ்ல நடந்துச்சு... கூட்டம் நடக்குறதுக்கு முன்னாடி பொறுப்பு சி.இ.ஓ.,வா இருக்குற காளிமுத்து, கலெக்டர சந்திச்சிருக்காரு. பத்தாம் வகுப்பு தேர்வுல, ரேங்க் குறைச்சிருச்சுன்னு கலெக்டர் வருத்தப்பட்டு சொல்லியிருக்காரு...
சோதனை மேல் சோதனைபோதுமடா சாமி...
''சித்ராக்கா... தெற்கு உழவர் சந்தைக்கு வந்த விவசாயிகளோட வாகனங்களுக்குகே.வி.ஆர்., நகர் போலீசார் பூட்டு போட்டு அபராதம் விதிச்சாங்களாம். சந்தை திறக்கலைன்னா, சந்தைக்கு முன்னாடி நிறுத்தாம, எங்கு போய் வண்டிகளை நிறுத்திறது... வாகனங்களுக்கு பூட்டு போட்டது தப்பு; போராட்டம் நடத்துவோம்ன்னு விவசாயிகள் சொல்லியிருக்காங்க... வாகனங்களை கொடுத்துடுறோம். பைன் போட்டதை ஒன்னும் பண்ண முடியாதுன்னுட்டாங்களாம்.
நடந்ததெல்லாம் மறந்திருப்போம்நடப்பதையே நினைத்திருப்போம்
''மித்து... திருப்பூர்ல ஒரு கிளப்ல நடந்த சீட்டாட்ட வீடியோ வெளியாச்சுல்ல... அதுக்கப்புறம் அங்க போலீசார் ரெய்டு நடத்துனாங்க... 'எல்லா கிளப்களையும் கண்காணிக்கணும்'ன்னு கமிஷனர் ஸ்ட்ரிக்டா உத்தரவு போட்டுட்டாராம்.
இருக்கும் இடத்தை விட்டுஇல்லாத இடம் தேடி
''மித்து... வீரபாண்டி ஸ்டேஷன்ல குற்றப்பிரிவுக்கு வந்துள்ள அதிகாரி, முன்பு சட்டம்-ஒழுங்குல இருந்தவரு... இப்ப அதே நினைப்பில, 'சட்டம்-ஒழுங்கு'ல மூக்கை நுழைக்கிறாராம்''
பொய்யான சில பேர்க்கு புது நாகரிகம்புரியாத பல பேர்க்கு இது நாகரிகம்
''மித்து... சிட்டில, குறுகலான தெருக்கள்ல கட்டட இடிபாடு, கடைகளுக்கு விற்பனைக்கு கொண்டு வரும் சரக்குகள்னு குவிச்சு இடையூறு ஏற்படுது. தாராபுரம் ரோடு, குமரப்பபுரம் பகுதியில, குறுகலான வீதியில் பொருட்களைக் குவிச்சு ஆக்கிரமிச்சது தொடர்பா மாநகராட்சிக்கு புகார் தெரிவிச்சிருக்காங்க... இதுக்கு ''மீண்டும் மீண்டும் ஆக்கிரமிப்பு நடந்ததாக புகார் தெரிவிக்கிறதால, போலீசில் புகார் கொடுத்து தீர்வு காணுங்க'ன்னு பதில் அளிச்சிருக்காங்க... இது எப்படி இருக்கு?'
என்னதான் நடக்கும் நடக்கட்டுமேஇருட்டினில் நீதி மறையட்டுமே
''மித்து... பல்லடத்துல மின் அதிகாரி, சீனியாரிட்டி படி இல்லாம துட்டு வாங்கீட்டு தனக்கு சாதகமான ஒருத்தருக்கு டிரான்ஸ்பர் போட்ருக்காரு. பாதிக்கப்பட்டவரு புகார் கொடுக்க இப்ப 'என்ன'சாமி' பண்றதுன்னு 'பழநி' முருகனை வேண்டுறாராம் அந்த அதிகாரி''