/வாராவாரம்/சித்ரா...மித்ரா (திருப்பூர்)/ 'சூரிய' கட்சியினர் கைகலப்பு; 'இலை' கட்சியினர் மலைப்பு 'சூரிய' கட்சியினர் கைகலப்பு; 'இலை' கட்சியினர் மலைப்பு
'சூரிய' கட்சியினர் கைகலப்பு; 'இலை' கட்சியினர் மலைப்பு
'சூரிய' கட்சியினர் கைகலப்பு; 'இலை' கட்சியினர் மலைப்பு
'சூரிய' கட்சியினர் கைகலப்பு; 'இலை' கட்சியினர் மலைப்பு

'சூரியக்கட்சி'யினர் திணறல்
''மித்து... நிர்வாகிகளுக்கு அவங்களோட பகுதில ஆயிரம் வாக்காளர் இருந்தா கட்டாயம் 300 பேரை புதிய உறுப்பினரா சேர்க்கணும்ன்னு சூரியக்கட்சி 'டாஸ்க்' கொடுத்திருக்கு.
'ஆபாச' அர்ச்சனை
''சித்ராக்கா... இன்னொரு சூரியக்கட்சி மேட்டர். தாராபுரம் பக்கத்துல, 'கொளத்து' பேரூராட்சி துணைத்தலைவரா இருக்கிறாராம் 'மீசை-சாமி', குடிநீர் பணியாளரை ஆபாச வார்த்தைகள்ல 'அர்ச்சனை' பண்ணுனாராம். ஆடியோ லீக் ஆயிருச்சு.
'பழுக்கும்' போலீஸ் பாக்கெட்
''சித்ராக்கா... சிட்டில தெற்கு பகுதியில சில போலீஸ் அதிகாரிங்க, சாப்பாடு, சொந்த வேலைக்குன்னு துட்டைக் கண்ணுல காட்டுறதே கிடையாதாம். இதனால, தங்களோட 'பாக்கெட் மனி' பறிபோகுது... அதிகாரிங்க ருசியா சாப் பிட ஓட்டல், ஓட்டலா ஏறி இறங்க வேண்டியிருக்குன்னு போலீஸ்காரங்க புலம்பறாங்க... இது கமிஷனர் காதுக்கும் போயிருச்சாம்...''
மாணவிகள் 'ரிலாக்ஸ்'
''மித்து... 'இன்ஸ்டா' பதிவுனால, ரெண்டு ஸ்கூல் மாணவிங்க மோதிக்கிட்டாங்கள்ல. மோதலுக்கு மூளையா செயல்பட்ட மாநகராட்சி பள்ளி மாணவிகளோட பட்டியலை தயாரிச்சு மாவட்ட கல்வித்துறை அதிகாரிங்க, கவுன்சிலிங்குக்கு கூப்பிட்டிருக்காங்க... பெற்றோர், மாணவிகள் வந்திருக்காங்க... பெற்றோர்கள்ட்ட இனிமேல் மாணவிகள் இப்படி பண்ணுனா, 'டிசி கொடுத்துடுவோம்'னு சொல்லியிருக்காங்க...
அலறிய பக்தர்கள்
''மித்து.. திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வளாகத்துல பலா மரம் இருக்குது; பெரிய காய்கள் மரத்தில் காய்த்து குலுங்குது... மாணிக்கவாசகர் குருபூஜை நாள்ல, பெண்கள் பிரகாரத்தை சுத்திவந்தப்ப, மரத்தில் இருந்து, பலாப்பழம் ஒண்ணு உதிர்ந்து, உருண்டுவந்து அறிவிப்பு பலகை மீது பட்டு தரையில விழுந்திருச்சாம். பக்தர்கள் அலறி யடிச்சு ஓடுனாங்களாம். பக்தர்கள் பாதுகாப்பு விஷயத்துல ரொம்ப கவனமா இருந்தாகணும்''
நொந்துபோன விவசாயிகள்
''சித்ராக்கா... புது கலெக்டர் பொறுப்பேற்றதால, கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டத்துக்கு ஏராளமான விவசாயிகள் வந்திருந்தாங்க... அரங்கத்துல கூட்டம் அலைமோதுச்சு..