Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/செல்லமே/ இது இன்னொரு தாய்வீடு!

இது இன்னொரு தாய்வீடு!

இது இன்னொரு தாய்வீடு!

இது இன்னொரு தாய்வீடு!

ADDED : ஜூன் 28, 2025 10:36 AM


Google News
Latest Tamil News
என் வீட்டில் ஏழு சிட்ஜூ பப்பிகள் வளர்க்கிறேன். வெளியூருக்கு செல்லும் போதெல்லாம் இவற்றை எங்கு தங்க வைப்பது என்று தெரியாமல் திணறினேன். சில கென்னல்களில் தங்க வைத்தபின், உண்ணி பூச்சிகள் அவை மீது ஏறி, நோய் தொற்றுக்கு ஆளாகி படாதபாடு பட்டோம்.

என்னை போலவே நண்பர்கள், உறவு வட்டாரங்களில் செல்லப்பிராணி வளர்ப்பவர்களும் அவதிப்பட்டதால், சென்னை, தி.நகரில், 6 ஆயிரம் சதுர அடியில், அனைத்து வசதிகளுடன் கூடிய கென்னல் ஆரம்பித்துவிட்டோம். இது, பப்பிகளுக்கான மற்றொரு தாய்வீடாக இருக்கும் வகையில் அமைத்துள்ளோம் என்கிறார், பெட் க்யூர் கென்னல் நிறுவனர் ஜெமிளா.

அப்படி என்ன வசதி இருக்கிறது என்றதும், அவர் நம்மிடம் பகிர்ந்தவை:

பப்பிக்கு மெத்தை, ஏசி., வசதியுடன் கூடிய பாதி திறந்த நிலையில் இருப்பது போன்ற தனி அறைகள், அவை விளையாடுவதற்கு பிரத்யேக இடம், அழகுபடுத்த குரூமிங் சென்டர், பப்பியை அழைத்து வர தனி டாக்ஸி, அவை விரும்பி சாப்பிடும் உணவு பட்டியல் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

கென்னலில் கால்நடை மருத்துவமனையும் இருப்பதால், இங்கே தங்க வைக்கும் நொடியில் இருந்து அவைகளின் ஆரோக்கியத்திற்கு நாங்கள் பொறுப்பேற்று கொள்கிறோம். எல்லா நேரங்களிலும், இங்கே கால்நடை மருத்துவர்கள் இருப்பர்.

இதேபோல, பப்பியின் பராமரிப்புக்கு எந்நேரமும் ஆட்கள் உடனிருப்பர். ஒருநாளைக்கு மூன்று முறையாவது, உரிமையாளருக்கு அதன் செயல்பாடுகளை வீடியோவாக எடுத்து பகிர்கிறோம். பகல் நேரத்தில் மட்டும் பராமரிக்கவும் வசதி இருப்பதால், வேலைக்கு செல்வோர் இங்கே வந்து உங்க செல்லத்தை விட்டு செல்லலாம். ஒருமுறை இங்கே வந்து தங்கினால், மீண்டும் வரும் போது, அது மகிழ்ச்சியாக இருப்பதை உணரலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்புக்கு: petcurechennai@gmail.com





      Our Apps Available On




      Dinamalar

      Follow us