
அவருடன் ஓர் சந்திப்பு...
உங்ககிட்ட இருக்கற வெரைட்டி பத்தி...பைத்தான், இக்வானா, சுகர்கிளேடர், மைக்ரோ ஸ்குரில், ஹாம்ஸ்டர், டாரன்டுலா, பேர்ட்ஸ், கேட்ஸ், டாக்ஸ், இதோட புட்ஸ் இருக்கு. நான் ப்ரீடிங் பண்றதில்லை. இதனால, கஸ்டமர்ஸ் கேக்குற புது எக்ஸாடிக் வெரைட்டிய, ப்ரீடர்கிட்ட இருந்து வாங்கி கொடுக்குறோம். இதை எப்படி வளர்க்கணும்னு ஓனருக்கு வழிகாட்டுறோம்.பாஸ்ட் மூவிங்ல இருக்கற எக்ஸாடிக் என்னென்ன?
இக்வானா
ப்ளூ, ரெட், கிரீன்னு யுனிக்கான கலர்ல இருக்கறதால, குட்டீஸ் விரும்பி வளக்குறாங்க. இது ப்யூர் வெஜிடேரியன். ஆப்பிள், மஞ்சள் பூசணி, பாலக்கீரை கொடுத்தா, விரும்பி சாப்பிடும். பொறந்து 4 மாசத்துக்கு அப்புறம் முறையா பழக்கி, கஸ்டமருக்கு கொடுக்கறதால, ஈஸியா அட்டாச் ஆகிடும். கொஞ்சம் நாள் மட்டும், கூண்டுக்குள்ள வச்சிட்டு, அப்புறம் வீட்டுக்குள்ள ஓபன் ஸ்பேஸ்லயே வளர்க்கலாம். அதிகபட்சமா, 25 வருஷம் வரைக்கும் வாழுறதோட, 6 அடி வரைக்கும் வளரும். நானும் இக்வானா வளக்குறேன். இதோட பேரு ராசுக்குட்டி. இப்போ, மூன்றரை வயசு ஆகுது. ப்ரீ டைம்ல இதோட இருந்தா, மேல ஏறி விளையாடி குஷியாகிடும்.
பைத்தான்
ஸ்னேக் வெரைட்டில, பைத்தான் தான் அதிகம் வளக்குறாங்க. இதுல, பால், கார்பெட், புர்மீஸ், ராயல் பைத்தான்-னு சில வெரைட்டி இருக்குது. ஏழு மாசத்துக்கு அப்புறமா தான், கஸ்டமருக்கு கொடுப்போம். அதுவரை, கையில எடுத்து பழக்கப்படுத்துறதால, பல் இருந்தாலும் கடிக்காது. விஷத்தன்மை இல்லாதது.
டாரன்டுலா
இது ஒரு எட்டுக்கால் பூச்சி வெரைட்டி; மெக்சிகன் நாட்டு ப்ரீட். இதையும் கூண்டுக்குள்ள வச்சி வளர்க்கலாம். பாம்பு மாதிரி இதோட கூண்டுலயும், வெட், ட்ரை, ஹிடன் பிளேஸ் செட் அப் இருந்தா, துறுதுறுன்னு விளையாடிட்டு இருக்கும். வாரத்துக்கு ஒருமுறை சாப்பாடு கொடுத்தா போதும். இதுக்குன்னு பிரத்யேகமான கமர்ஷியல் புட் கடைகள்ல கிடைக்குது. சாப்பிடும் போது மட்டும் தான் தண்ணீர் குடிக்கும். இதையும் கையில எடுத்து பழக்கப்படுத்திட்டு, கஸ்டமருக்கு கொடுக்கறதால, நோ பாய்சன். டாரன்டுலாவை குட்டீஸ் ஆர்வமா கேட்டு வாங்குறாங்க. இதோட விலை 4,000 ரூபாய்.
''போதும் போதும்...!
லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது''னு, வடிவேல் டயலாக்கோட விடை பெற்றோம்.