'டாக் ஷோ'வில் நானே கில்லி விருதுகளை அள்ளுகிறார் சொல்லி
'டாக் ஷோ'வில் நானே கில்லி விருதுகளை அள்ளுகிறார் சொல்லி
'டாக் ஷோ'வில் நானே கில்லி விருதுகளை அள்ளுகிறார் சொல்லி
ADDED : ஜூன் 22, 2024 12:37 PM

கோவையைச் சேர்ந்த, 10 வயதான அக் ஷித்தா ராஜை சந்தித்தோம். கிரேடன், முதொல்ஹவுன்ட், பாக்ஸர்னு, நிறைய டாக்ஸோட, ஹாப்பியா வீட்டில் விளையாடிட்டு இருந்தார். அவருடன் பேட்டி: இந்த வயசுலயே ஷோ ஹாண்டுலர்... எப்படி? சின்ன வயசுல இருந்தே, அடம்புடிச்சி அப்பாவோட டாக் ஷோ போவேன். அங்க ஸ்டைல்லா டாக் வாக் பண்றது, ஒபீடியன்ட்டா நடந்துக்கறதை பார்த்து, நானும் ஹேண்டுலர் ஆகணும்னு ஆசைப்பட்டேன். இதுக்காக, டெய்லி டிரைனிங் எடுத்துக்கிட்டேன். என்னோட பர்ஸ்ட் ஷோல, வேற லெவல் எக்ஸ்பீரியன்ஸ் கிடைச்சுது.
அப்போ நான் 4ம் வகுப்பு படிச்சிட்டிருந்தேன். மதுரையில நடந்த டாக் ஈவன்ட் தான் என்னோட பர்ஸ்ட் ஷோ. இதுக்காக நிறைய பிராக்டிஸ் பண்ணேன். ஆனா ஷோ நடந்தப்போ, காய்ச்சல் வந்துடுச்சு. நிக்க கூட தெம்பு இல்லாம தான் ஷோ நடக்கற இடத்துக்குள்ள போனேன். என்னோட பேரை மைக்ல கூப்பிட்டதும், முதொல் ஹவுன்ட் ப்ரீட்டோட ரிங்குல என்ட்ரீ ஆகிட்டேன். ஜட்ஜ் எனக்கு கைக்கொடுத்து பாராட்டுனாங்க. பெஸ்ட் ஷோ அவார்ட் கிடைச்ச அந்த நிமிஷத்தை மறக்கவே முடியாது. மெடல் வாங்குனதும், ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகிட்டேன்.
அந்த அவார்ட் கொடுத்த எனர்ஜில, இந்த ஒன்றரை வருஷத்துல, 30 ஷோ என்ட்ரீ ஆகிட்டேன். 15 பெஸ்ட் ஜூனியர் அவார்ட் வாங்கியிருக்கேன். இன்னும் 5 அவார்ட் வாங்கிட்டா போதும், இந்தியா பெஸ்ட் ஜூனியர் ஹேண்டுலர்ங்கற டைட்டிலுக்கு சொந்தக்காரி ஆகிடுவேன்,'' என்றார்.
ஷோ ஹேண்டிலிங்ல உங்க ஸ்டைல்?
ஷோ ரிங்குல, டாக் நிக்கறது, நடக்குறது எல்லாமே, லீஸ் ஹேண்டிலிங்ல தான் இருக்கு. லெக் ஷேப், ஸ்டாண்டிங் ஸ்டைல், டெய்ல் லென்த், அனாடமி செக் பண்ணுவாங்க. பல்வரிசை காட்டணும். ரிங் உள்ள போய்ட்டா, டாக் யாரையும் கடிக்க கூடாது. இதுக்கு ஒரு சீக்ரெட் டெக்னிக் இருக்கு என, கண்களை சிமிட்டினார் அக் ஷித்தா.
அதென்ன சீக்ரெட் என்றதும், '' எந்த ப்ரீடா இருந்தாலும், அதோட கீ பாய்ன்ட்ல தடவி கொடுத்தா, ஓனர் சொல்றதை கேட்டு, சமத்துக்குட்டியா நடந்துக்கும். என்னோட முதொல்ஹவுன்ட்டோட கீ பாய்ன்ட் கழுத்துல இருக்கு. அந்த இடத்தை நீவி கொடுப்பேன். ஷோ முடியற வரைக்கும் நகராம அப்படியே நிக்கும். இதை தெரிஞ்சிக்கிட்டா ஷோ ரிங்கு உள்ள இறங்கி, கில்லி மாதிரி ஆடலாம்,
என்றார்.