ADDED : ஜூன் 22, 2024 12:30 PM

உங்க பேர்ட்ஸ் ஜாலியா, சுதந்திரமா சிறகடிச்சு, வீட்டுக்குள்ளேயே சுத்தி சுத்தி வரணுமா. அவங்களுக்காக, வீட்டுல இருக்கற பழைய பிளாஸ்டிக் பொருட்களை வச்சி, மரம் மாதிரி செட்-அப் உருவாக்கலாம் வாங்க.
பழைய பி.வி.சி., பைப், கலர் த்ரெட்ஸ், ஆங்கர் கம்பி, சின்ன சின்ன டாய்ஸ் இருந்தா போதும். மரத்தோட பேஸ்மேன்ட்டுக்காக அடியில, சதுரமா பைப் செட் பண்ணிடனும். இதுல, கிளைகள் இருக்கற மாதிரி, பெண்டு பைப்ஸ், ஜாயின்ட் பண்ணிட்டா, படத்துல இருக்கற மாதிரியான மரத்தை உருவாக்கலாம்.
பெரிய கிளைக்கு நடுவுல ஹோல்ஸ் போட்டு, இரும்பு ஆங்கர் செட் பண்ணிட்டா, குட்டியான டாய்ஸ் தொங்க விடலாம். ரெடிமேட் பிளாஸ்டிக் ஆங்கர்சும் கடைகள்ல கிடைக்குது. இதை கலர்புல்லாக்குறதுக்கு, ரோப்ஸ் சுத்தி, டெக்ரேட் பண்ணலாம். பேர்ட்ஸ் ஏறி விளையாட, குட்டி ஏணி வைக்கலாம். பிளாஸ்டிக்பைப்போட வெயிட், சைஸ் பொறுத்து, சின்ன பேர்ட்ஸ்ல இருந்து, எக்ஸாடிக் வெரைட்டி வரைக்கும், உட்கார்ந்து விளையாடும்.
இந்த மாதிரியான டாய்ஸ் வீட்டுல இருந்தா, நீங்க இல்லாத நேரத்துலயும், பேர்ட்ஸ் ரிலாக்ஸா விளையாடி, என்ஜாய் பண்ணும். அப்புறம் என்ன பாஸூ, உங்க மொத்த கலைத்திறனையும் காட்டிட வேண்டியதுதானே!