Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/செல்லமே/ அகம் நெகிழ... மனம் மகிழ!

அகம் நெகிழ... மனம் மகிழ!

அகம் நெகிழ... மனம் மகிழ!

அகம் நெகிழ... மனம் மகிழ!

ADDED : ஜூன் 07, 2025 09:05 AM


Google News
Latest Tamil News
''பப்பி, மியாவுக்கு மட்டுமல்ல, பறவை, ஹாம்ஸ்டர், கினியாபிக் என எல்லா வகையான எக்ஸாடிக் செல்லங்களுக்கும், வித்தியாசமான விளையாட்டு பொருட்களை இறக்குமதி செய்து விற்கிறோம்,'' என்கிறார், சென்னை கொளத்துாரை சேர்ந்த நோவா பெட் ஸ்டோர் (Noah Pet Store) உரிமையாளர் டேவிட்.

இன்றைய இளைஞர்கள் வித்தியாசமான செல்லப்பிராணி வளர்க்கவே விரும்புகின்றனர். அவற்றை குறிப்பிட்ட இடத்திற்குள் அடைத்து வைப்பதால், மன அழுத்தம் ஏற்படலாம். வீட்டில் யாருமில்லாத நேரத்திலும், அவற்றை பிசியாக வைத்திருக்க உதவும் சில விளையாட்டு பொருட்கள் பற்றி, இவர் நம்மிடம் பகிர்ந்தவை:

சைக்கிள்: எக்ஸாடிக் பறவை வளர்ப்பவர்கள், கூண்டுக்குள் மரக்கிளை, சில விளையாட்டு பொருட்களை தொங்க விட்டிருப்பர். அத்துடன், இந்த சைக்கிளையும் உள்ளே வைத்தால், பறவை இதன் மீது ஏறி ஓட்டுவதை ரசிக்கலாம். பறவையின் எடைக்கேற்ப, இந்த சைக்கிள் வாங்கி கொள்ளலாம்.

பேம்பர்ஸ்: குழந்தைகளுக்கு அணிவிப்பது போன்ற 'பேம்பர்ஸ்', பறவைகளுக்கும் உள்ளது. சிலர், வெளியிடங்களுக்கு பறவையை, தோள் மீது அமர்த்தி, அழைத்து செல்வர். அச்சமயங்களில், அதன் எச்சத்தால், சட்டை அழுக்காகிவிடாமல் இருக்க, இந்த பேம்பர்ஸ் அணிவிக்கலாம். காட்டன் துணியில் கிடைப்பதால், பறவைக்கு எந்த தொந்தரவும் ஏற்படுத்தாது.

மாடர்ன் டிரஸ்: பப்பி, மியாவுக்கு வித்தியாசமான ஆடைகளை பார்த்திருப்பீர்கள். இதேபோல, வெள்ளெலியான ஹாம்ஸ்டருக்கும், கவுன் மாடலில், புதிய வகை டிரஸ் உள்ளது. இதை வாங்கி அணிவித்து, வித்தியாசமான போஸ்களில் போட்டோ ஷூட் எடுத்து அசத்தலாம்.

குளியல் டப்பா: கினியாபிக், ஹாம்ஸ்டர் போன்ற செல்லப்பிராணிகள், துறுதுறுவென ஓடிக்கொண்டே இருக்கும். இதை குளிப்பாட்டுவது அவ்வளவு எளிதல்ல. இதற்காக, பிரத்யேக குளியல் டப்பா உள்ளது. இதில் தண்ணீர் நிரப்பி உள்ளே விட்டால், அதுவே சுத்தப்படுத்தி கொள்ளும்.

குதித்து விளையாட: சிறிது உயரம் வரை குதித்து விளையாடும், எக்ஸாடிக் செல்லங்களுக்கு, இந்த 'ஜாக்கிங் வீல்' வாங்கி தரலாம். இதில் ஏறினாலே, சுற்ற ஆரம்பிக்கும். ஒரே இடத்தில் குதித்து குதித்து விளையாடும். இதை கூண்டுக்குள் வைத்தால், உங்களோடு விளையாட வேண்டுமென அடம்பிடிக்காது.

ஹெல்மெட்: சன் கனுார், ஸ்மால் கனுார் போன்ற சிறிய வகை பறவைகளுக்கு ஏற்ப, தற்போது சந்தையில், ஹெல்மெட்டுகள் கிடைக்கின்றன. நாம் அணிவது போலவே, பறவைக்கும் அணிவித்து அழகு பார்க்கலாம். இது எடை குறைவாக இருப்பதால், பறவை ஜாலியாக விளையாடும்.

மினி ட்ராலி: ஷாப்பிங் மாலில் இருப்பது போன்ற டிராலிகள், பறவைகளுக்கு விற்கப்படுகிறது. இதை கூண்டில் வைத்து வளர்க்கும் அனைத்து செல்லப்பிராணிகளுக்கும் வாங்கி தரலாம். இதற்குள் உணவு பொருட்களை வைத்து விட்டால், விளையாடி கொண்டே சாப்பிடும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us