Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/அவியல்/நாங்க என்ன சொல்றோம்னா...: நரிவேட்டை

நாங்க என்ன சொல்றோம்னா...: நரிவேட்டை

நாங்க என்ன சொல்றோம்னா...: நரிவேட்டை

நாங்க என்ன சொல்றோம்னா...: நரிவேட்டை

PUBLISHED ON : மே 25, 2025


Google News
Latest Tamil News
ஆளும் வர்க்கத்துக்காக காக்கிகளின் வேட்டை!

இந்த ஒரு வரிக்கதைக்கு, ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு எதிராக ஒரு கான்ஸ்டபிள் களமாடுவதாக மேடை அமைத்திருக்கிறது திரைக்கதை. வாழ்விடத்தில் வீடு கேட்கும் பழங்குடியினரின் போராட்டத்தை நசுக்க காவல்துறை அரங்கேற்றிய அட்டூழியங்களை வெளியுலகத்துக்கு சொல்ல நினைக்கும் கான்ஸ்டபிள் வர்கீஸின் தீரம் இம்மேடையில் அரங்கேறுகிறது!

அடுத்தவரை அவரது இடத்தில் இருந்து அணுகாத குணம்; விருப்பமின்றி சேர்ந்த காவலர் பணி... இப்படியான 28 வயது வர்கீஸ், தன் கண்ணெதிரே நிகழ்ந்த அநீதிக்கு எதிராக போராடத் துணிகிறான். கதைக்களம் 2003 எனினும், இன்றைய இளைஞர்களின் சமூக உணர்வை சிறப்பாய் துாண்டுகிறது வர்கீஸான டொவினோ தாமஸின் நடிப்பு!

மவுனமாக காரியம் சாதிக்கும் ஐ.பி.எஸ்.,களின் அதிகார ஆட்டத்தை தன் உடல்மொழியில் நன்றாக வெளிக்காட்டி இருக்கிறார் சேரன். யார் அந்த ஆளும் வர்க்கம்; பெரும் பணக்காரர்களா, கார்ப்பரேட் நிறுவனங்களா, மாநில ஆளும் கட்சியா, மத்திய ஆளும் கட்சியா என்கிற விளக்கமின்றி 'மேலிடத்துல இருந்து பிரஷர்...' என்று மட்டுமே காக்கிகள் சொல்கின்றனர். பேச்சுவார்த்தைக்கு வரும் அமைச்சரும் பள்ளி தலைமை ஆசிரியர் அளவிலேயே கண்டிப்பு காட்டுகிறார்!

விஜயின் ஒளிப்பதிவும், ஷமீர் முகமதுவின் படத்தொகுப்பும் காட்சிகளை தெளிவுற விளக்குவதுடன், அடர் வனத்திற்குள் இருக்கும் உணர்வைத் தருகின்றன! 'உண்மைகள் புதைக்கப்பட்ட குழிகளை அதிகாரவர்க்கத்தால் வெகு காலத்திற்கு மூடி வைக்க முடியாது' என்கிற உண்மையை ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை வழியே சொல்லி கம்பீரமாக நிறைவுறுகிறது க்ளைமாக்ஸ்.

ஆக...

'சோளகர் தொட்டி' நாவலுக்கு வெற்றிமாறன் திரைக்கதை எழுத வேண்டிய நேரம் வந்துவிட்டது!




      Our Apps Available On




      Dinamalar

      Follow us