Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/அவியல்/நாங்க என்ன சொல்றோம்னா...: ஏஸ்

நாங்க என்ன சொல்றோம்னா...: ஏஸ்

நாங்க என்ன சொல்றோம்னா...: ஏஸ்

நாங்க என்ன சொல்றோம்னா...: ஏஸ்

PUBLISHED ON : மே 25, 2025


Google News
Latest Tamil News
'மொக்கை' படம் இல்ல; 'தரமான' படமும் இல்ல!

ஒரு ஜெயில் பறவை தன் விடுதலைக்கு அப்புறமும் தன்னோட திருட்டு புத்தியை பயன்படுத்தி கொள்ளை அடிக்கிறது, அப்படியே ருக்மிணி வசந்தோட இதயத்தை திருடுறதுன்னு போகுது கதை!

பெரிய பாவனைகள்னு ஒண்ணும் இல்லை; மைதா மாவு அடிக்கடி கைகட்டி நிற்கிற மாதிரி இருக்கு; இந்த ருக்மிணி வசந்த் கூட விஜய் சேதுபதிக்கு 'உருகுது... உருகுது'ன்னு ஒரு பாட்டு. 'குரலா... இசையா... எது மயக்குது'ன்னு யோசிக்க விடாம உருக வைக்குது அந்த பாட்டு!

'பிக்பாஸ்' மேடைக்கு அலட்டாம நடந்து வர்ற மாதிரி படம் முழுக்க வந்து போறார் விஜய் சேதுபதி. அப்பப்போ, புன்னகையை விதவிதமா வெளிப்படுத்தணும்னு பெருமுயற்சி எடுக்கிறாரு... பாவம்... விளைச்சல் சரியில்லை!

தான் யாருங்கிறதை யோகிபாபுகிட்டே மறைச்சு, சமையல்காரனா வேலைக்கு சேர்ந்து, வங்கி பணத்தை கொள்ளையடிச்சு, லாட்டரியில பணம் சம்பாதிச்சு...ன்னு விஜய் சேதுபதியை தலைக்கு மேல துாக்கி தாறுமாறா சுத்தி வீசி இருக்கிற திரைக்கதையில, உருண்டு புரண்டு யோகிபாபு நிறைய முயற்சி பண்ணியிருக்கார். ஆனா, எந்த ஒரு ஆணியையும் அவர் சரியா பிடுங்கலை!

'ஆஹா... ஓஹோ...'ன்னு சொல்ற அளவுக்கு படத்துல எதுவும் இல்லை! பழைய பேப்பர் கடைக்குள்ளே அரை மணி நேரம் உட்கார வேண்டிய சூழல் அமைஞ்சதுன்னா, கையில சிக்குற புத்தகத்தை எல்லாம் சும்மா புரட்டுவோம் இல்லையா; அப்படி புரட்டுறப்போ நல்லது, கெட்டது நாலும் நம்ம கண்ணுல படும்; பொழுதும் சுவாரஸ்யமா போயிரும். அப்படி பொழுதுபோக வைக்குற பழைய பேப்பர்கடை தான் இந்த ஏஸ்.

ஆக...

கடும் வெயிலில் கரும்பு ஜூஸ் கடையில் தண்ணீர் குடித்து தாகம் தணித்தது போல் இருக்கிறது!




      Our Apps Available On




      Dinamalar

      Follow us