/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/செங்கோட்டை குண்டாறு அணை புனரமைப்பு : அமைச்சர் செந்தூர்பாண்டியன் தகவல்செங்கோட்டை குண்டாறு அணை புனரமைப்பு : அமைச்சர் செந்தூர்பாண்டியன் தகவல்
செங்கோட்டை குண்டாறு அணை புனரமைப்பு : அமைச்சர் செந்தூர்பாண்டியன் தகவல்
செங்கோட்டை குண்டாறு அணை புனரமைப்பு : அமைச்சர் செந்தூர்பாண்டியன் தகவல்
செங்கோட்டை குண்டாறு அணை புனரமைப்பு : அமைச்சர் செந்தூர்பாண்டியன் தகவல்
ADDED : ஆக 08, 2011 03:45 AM
கடையநல்லூர் : விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு செங்கோட்டை குண்டாறு அணை புனரமைப்பு பணி மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.தமிழக கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சரும், மாவட்ட அதிமுக செயலாளருமான செந்தூர்பாண்டியன் நேற்று காலை தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு வருகை தந்தார்.
அமைச்சருக்கு புதிய நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட துணை செயலாளர் வி.பி.மூர்த்தி, மாவட்ட பொருளாளர் இலஞ்சி சண்முகசுந்தரம், மாவட்ட இளைஞரணி செயலாளர் சவுக்கை வெங்கடேசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ, நயினா முகம்மது, மாவட்ட பேரவை இணை செயலாளர் வடகரை ரஜப் முகம்மது, பேரவை துணை செயலாளர் சிவகிரி கார்த்திகை செல்வன், மாணவரணி இணை செயலாளர் வக்கீல் அருள்ராஜ், துணை செயலாளர் யாத்ரா பழனி, மாவட்ட மருத்துவர் அணி தலைவர் டாக்டர் சஞ்சீவி, மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் டாக்டர் சுசீகரன், மாவட்ட விவசாய பிரிவு இணை செயலாளர் கனகுபாண்டியன் மற்றும் தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன், ஒன்றிய செயலாளர்கள் வசந்தம் முத்துப்பாண்டி, செல்லப்பன், சங்கரபாண்டியன், நகர செயலாளர் கிட்டுராஜா, மாவட்ட இலக்கிய அணி இணை செயலாளர் சாகுல்ஹமீது, ஒன்றிய பேரவை செயலாளர் பெரியதுரை, நகர மாணவரணி செயலாளர் செங்கலமுடையார், சொக்கம்பட்டி பெருமையாபாண்டியன், மெடிக்கல் சரவணன் உட்பட பலர் வரவேற்றனர்.பின்னர் அமைச்சர் செந்தூர்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:''அதிமுக அரசு சமீபத்தில் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் அறிவிப்பு ஏழைகள் நலன் காக்கும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது. நெல்லை மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கால்நடை கல்லூரி அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். கடையநல்லூர் தொகுதியில் விவசாயிகளின் ஜீவாதார பகுதிகளாக விளங்கும் குண்டாறு அணை, அடவிநயினார் அணை, கருப்பாநதி அணை போன்றவை மூலம் பல ஆயிரம் ஏக்கர் விவசாய பணிகள் நடந்து வருகிறது.பட்ஜெட் அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள கால்வாய், ஏரிகளை சீரமைக்க சுமார் 360 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதியிலிருந்து கடையநல்லூர் தொகுதியில் உள்ள குண்டாறு அணைக்குட்பட்ட கால்வாய்களையும், குளங்களையும் சீரமைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பாசன பரப்பிற்குட்பட்ட குண்டாறு அணை விவசாயிகளின் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு இதற்கான பணிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளது'' என்றார்.அமைச்சருடன் எம்.எல்.ஏ.,உதவியாளர் செங்கோட்டை குருசாமி, குட்டியப்பா, செங்கோட்டை நகர செயலாளர் தங்கவேலு மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.


