/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/லே-செயலாளர் பதவிக்கு திருமண்டல மறுமலர்ச்சி பொது வேட்பாளர் அறிவிப்புலே-செயலாளர் பதவிக்கு திருமண்டல மறுமலர்ச்சி பொது வேட்பாளர் அறிவிப்பு
லே-செயலாளர் பதவிக்கு திருமண்டல மறுமலர்ச்சி பொது வேட்பாளர் அறிவிப்பு
லே-செயலாளர் பதவிக்கு திருமண்டல மறுமலர்ச்சி பொது வேட்பாளர் அறிவிப்பு
லே-செயலாளர் பதவிக்கு திருமண்டல மறுமலர்ச்சி பொது வேட்பாளர் அறிவிப்பு
ADDED : செப் 17, 2011 02:50 AM
திருநெல்வேலி : நெல்லை திருமண்டல லே-செயலாளர் பதவிக்கு திருமண்டல மறுமலர்ச்சிக்கான கூட்டு இயக்கத்தின் சார்பில் பொது வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து வேதநாயகம், ஏ.டி.ஜே.சி தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:நெல்லை திருமண்டலம் இறை பணியோடு கல்வி, மருத்துவம், பொது சேவை, மறுவாழ்வு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.
இறை பணிகளை கவனிக்க குருவானவர்கள், நிர்வாக பணிகளை கவனிக்க சபையார்கள் செயல்பட்டு வருகின்றனர். சமீப காலமாக திருமண்டல தேர்தல்களை முன்னிறுத்தி பல்வேறு விதமான போராட்டங்கள் ஏற்படுகிறது.திருச்சபை மக்களை ஒன்றுபடுத்த கூடியவர்கள் அவர்களை பிரித்தாளுகின்றனர். எனவே, சபை மக்களை ஒன்றிணைக்கவும், திருமண்டலத்தின் கண்ணியத்தையும், திருச்சபையையும் பாதுகாக்கவும் இதுவரை இரண்டு அணிகளாக செயல்பட்டு வந்த நாங்கள் பொது நோக்கத்திற்காக திருமண்டல மறுமலர்ச்சிக்கான கூட்டு இயக்கமாக செயல்பட தீர்மானித்துள்ளோம்.இரண்டு அணிகளும் இணைந்து லே செயலாளர் பதவிக்கான பொது வேட்பாளராக ஏ.டி.ஜே.சி தினகரை வரும் தேர்தலில் முன்னிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, குருவானவர்கள், செயற்குழு உறுப்பினர்கள், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள், திருச்சபையார் எங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.இதில் நிர்வாகிகள் ஏ.டி.ஜே.சி மனோகர், சந்திரசேகர், ஸ்டீபன் லயனல், சற்குணம், சாம் பிரகாஷ் உட்பட பலரும் உடனிருந்தனர்.