Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/கீறல் ஓவியம் வரைந்து அசாம் ஓவியர் சாதனை

கீறல் ஓவியம் வரைந்து அசாம் ஓவியர் சாதனை

கீறல் ஓவியம் வரைந்து அசாம் ஓவியர் சாதனை

கீறல் ஓவியம் வரைந்து அசாம் ஓவியர் சாதனை

ADDED : ஆக 03, 2011 10:18 PM


Google News

கவுகாத்தி : அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஓவியர் ஒருவர், அட்டையில், கூர்மையான பொருட்களைக்கொண்டு கீறி, மிக நீளமான ஓவியத்தை வரைந்து, கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஓவியர் அபுராஜ் பரூவா, 12 மணி நேரத்தில், 67 அடி நீளமும், 5 அடி அகலமும் கொண்ட, மிக நீளமான ஓவியத்தை வரைந்து, கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்த நீளமான ஓவியத்தில், அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி, சீனா, ஆஸ்திரேலியா, பிரேசில், ஜப்பான், தென்னாப்பிரிக்கா, பிரான்ஸ், தாய்லாந்து உள்ளிட்ட, 40 நாடுகளைச் சேர்ந்த கிராமிய நடனக்காட்சிகள் இடம் பெற்றன. அசாமின் பாரம்பரிய கிராமிய நடனமான, பிகு நடனக் காட்சியும் ஓவியத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த ஓவியத்தின் மற்றொரு சிறப்பு, ஓவிய அட்டையில், கூர்மையான கத்தி, பிளேடு உள்ளிட்டவற்றைக் கொண்டு கீறியே வரையப்பட்டுள்ளது. ஓவிய அட்டையில், வெண்மையான, சீன களிமண் மற்றும் கறுப்பு மையால் மெலிதாக பூசி, அது காய்ந்த உடன் அதனை, கத்தி மற்றும் பிளேடால் கீறி, இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. கறுப்பு வெள்ளை தவிர, வேறு சில வண்ணங்களும் இந்த ஓவியத்தில் பயன்படுத்தப்படுள்ளன.

இந்த ஓவிய முறைக்கு, 'புரோமைடு கிராச் ஆர்ட்' என, அபுராஜ் பெயரிட்டுள்ளார். இதுகுறித்து, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தைச் சேர்ந்த அதிகாரி ஜாக் புரூக்மன் கூறுகையில், 'அபுராஜ் பரூவா மிக நீளமான ஓவியத்தை வரைந்து, சாதனைபடைத்துள்ளார். இந்த ஓவியத்தை அவர் வரையும் போது, 45 பேர் அவருடன் இருந்து, அவரை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தோம்' என, தெரிவித்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us