"எங்க ஊருக்காரங்க வெற்றி பெறணும்": கமலா ஹாரிஸ்-க்கு போஸ்டர் வைத்து கொண்டாடும் மக்கள்
"எங்க ஊருக்காரங்க வெற்றி பெறணும்": கமலா ஹாரிஸ்-க்கு போஸ்டர் வைத்து கொண்டாடும் மக்கள்
"எங்க ஊருக்காரங்க வெற்றி பெறணும்": கமலா ஹாரிஸ்-க்கு போஸ்டர் வைத்து கொண்டாடும் மக்கள்
ADDED : ஜூலை 24, 2024 06:03 PM

திருவாரூர்: அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் என அவரது சொந்த ஊரான திருவாரூரின் துளசேந்தரபுர மக்கள் பேனர் வைத்து கொண்டாடி வருகின்றனர்.
அமெரிக்காவில் வரும் நவ., 5ல் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக, அதிபர் பைடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனால் டொனால்டு டிரம்பை எதிர்த்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் களமிறங்க உள்ளார்.
ஆப்ரிக்க தந்தைக்கும், இந்திய தாய்க்கும் பிறந்தவர் கமலா ஹாரிஸ். கலிபோர்னியாவில் பிறந்த அவர், வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். கடந்த 2016ல் செனட் சபையின் எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2020ல் அதிபர் தேர்தலின் போது, ஜோ பைடன், துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிசை அறிவித்தார். கமலா ஹாரிஸ், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே துளசேந்திரபுரம் என்ற கிராமத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ்-க்கு, அப்பகுதி கிராம மக்கள் ஒன்றிணைந்து, தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக வாழ்த்து தெரிவித்து பல்வேறு இடங்களில் பேனர்கள் வைத்துள்ளனர். தற்போது இந்த பேனர்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. கமலா ஹாரிஸ் அதிபரானால், அமெரிக்காவின் முதல் கருப்பின பெண் அதிபர் என்ற பெயர் கிடைக்கும்.