/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.5 லட்சம் கடல் அட்டை பறிமுதல் இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.5 லட்சம் கடல் அட்டை பறிமுதல்
இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.5 லட்சம் கடல் அட்டை பறிமுதல்
இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.5 லட்சம் கடல் அட்டை பறிமுதல்
இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.5 லட்சம் கடல் அட்டை பறிமுதல்
ADDED : ஜூலை 24, 2024 05:19 PM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபம் வடக்கு கடற்கரையில், இந்திய கடலோர காவல் படை வீரர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசால் தடை செய்யப்பட்ட அரிய வகை கடல் வாழ் உயிரினமான, 130 கிலோ கடல் அட்டைகள் வேக வைத்த நிலையில் இருந்தன. மேலும், 10 மூட்டைகளில் 400 கிலோ மஞ்சள், 13 மூடையில் 650 கிலோ இஞ்சியும் இருந்தன.
இவற்றை கள்ளத்தனமாக நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்திச் செல்ல இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு, 5 லட்சம் ரூபாய். பறிமுதல் செய்த இந்திய வீரர்கள் கடல் அட்டையை வனத்துறையினரிடமும், இஞ்சி, மஞ்சளை சுங்கத்துறையினரிடமும் ஒப்படைத்தனர்.
இவற்றை மண்டபம் மேற்கு தெருவை சேர்ந்த கடாபி, 55, என்பவர் இலங்கைக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரிந்தது. தப்பியோடிய இவரை மத்திய, மாநில உளவுத்துறையினர் தேடி வருகின்றனர்.