/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ 18 கிளைச்சிறைகளை நிரந்தரமாக மூட உத்தரவு 18 கிளைச்சிறைகளை நிரந்தரமாக மூட உத்தரவு
18 கிளைச்சிறைகளை நிரந்தரமாக மூட உத்தரவு
18 கிளைச்சிறைகளை நிரந்தரமாக மூட உத்தரவு
18 கிளைச்சிறைகளை நிரந்தரமாக மூட உத்தரவு
ADDED : ஜூலை 24, 2024 08:14 PM
ராமநாதபுரம்:தமிழகத்தில் தற்காலிக மூடப்பட்டுள்ள 18 கிளைச்சிறைகளை நிரந்தரமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் சிறைச்சாலைகள், சீர்திருத்தபணிகள் துறை பொது இயக்குனர் மகேஷ்வர் தயாள் தலைமையில் சிறைச்சாலைகள் செயல்பாடுகள் குறித்து மத்திய சிறை கண்காணிப்பாளர்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது.இதில் தமிழகத்தில் கட்டடம் சேதம், போதிய கைதிகள் இல்லாமல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள துணை, சிறப்பு கிளைச்சிறைகளை நிரந்தரமாக மூட முன்மொழியப்பட்டது.
இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்துார், திருவாடானை, விருதுநகர் மாவட்டம் சாத்துார், துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார், புதுக்கோட்டை மாவட்டம் கீரனுார், திருமயம், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, ஆரணி, போளூர், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், கடலுார் மாவட்டம் துறைமுகம், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், பரமத்தி வேலுார், திருச்சி மாவட்டம் மணப்பாறை, முசிறி, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஆகிய 18 துணை, சிறப்பு கிளைச்சிறைகளை நிரந்தரமாக மூட மகேஷ்வர் தயாள் உத்தரவிட்டுள்ளார்.