/உள்ளூர் செய்திகள்/தேனி/தரம் உயர்த்தவேண்டிய வைகை அணை உயர்நிலை பள்ளிதரம் உயர்த்தவேண்டிய வைகை அணை உயர்நிலை பள்ளி
தரம் உயர்த்தவேண்டிய வைகை அணை உயர்நிலை பள்ளி
தரம் உயர்த்தவேண்டிய வைகை அணை உயர்நிலை பள்ளி
தரம் உயர்த்தவேண்டிய வைகை அணை உயர்நிலை பள்ளி
ADDED : செப் 11, 2011 11:21 PM
தேவதானப்பட்டி : வைகை அணை உயர்நிலைப்பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வைகை அணையில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சங்கரமூர்த்திபட்டி, முதலக்கம்பட்டி, இந்திரா காலனி, தாயமங்கலம், அண்ணாநகர், கே.கே.நகர் பொதுப் பணித்துறை குடியிருப்பு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். கூடுதலான கட்ட வகுப்பறை வசதிகள் உள்ளன. மேலும் இங்கு பயிலும் மாணவர்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இங்கிருந்து 10 கி.மீ., தூரம் உள்ள ஆண்டிபட்டி, 15 கி.மீ., தூரம் உள்ள பெரியகுளம் செல்ல வேண்டும். மாணவர்களின் எதிர்கால நலன் கருதி வைகை அணை அரசு உயர்நிலைப்பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.