Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ சவுதிக்கு அணுசக்தி திறன் பகிரப்படும்: பாக்., அமைச்சர்

சவுதிக்கு அணுசக்தி திறன் பகிரப்படும்: பாக்., அமைச்சர்

சவுதிக்கு அணுசக்தி திறன் பகிரப்படும்: பாக்., அமைச்சர்

சவுதிக்கு அணுசக்தி திறன் பகிரப்படும்: பாக்., அமைச்சர்

ADDED : செப் 20, 2025 03:10 AM


Google News
Latest Tamil News
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் - சவுதி அரேபியா இடையே சமீபத்தில் 'பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்' கையெழுத்தானது. 'இதன் அடிப்படையில் சவுதிக்கு அணுசக்தி திறன்களை பாகிஸ்தான் வழங்கும்' என, அந்நாட்டின் ராணுவ அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார்.

நம் அண்டை நாடான பாகிஸ்தான் மற்றும் மேற்காசிய நாடான சவுதி அரேபியா இடையே சமீபத்தில் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

முக்கியத்துவம்


இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளில், எந்த ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தினாலும் அது இரு நாட்டின் மீதான தாக்குதலாகவே கருதப்படும் என, குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக சவுதிக்கு அணுசக்தி திறன்களை வழங்குவோம் என, பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார்.

அணுசக்தி பரிமாற்றம் குறித்து வெளிப்படையாக ஒப்பந்தத்தில் குறிப்பிடவில்லை என்றாலும், சவுதிக்கு அணுசக்தி திறன்களை பாகிஸ்தான் வழங்கும் என அமைச்சர் கவாஜா தெரிவித்துள்ளார்.

மேலும், பிற அரபு நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் இணைய முடியுமா என்ற கேள்விக்கு, இதற்கு, முன்கூட்டியே பதிலளிக்க முடியாது எனவும், ஆனால், ஒப்பந்தத்திற்கான கதவுகள் மூடப்படவில்லை என்பதை மட்டும் தான் உறுதியாக கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுவரை இந்தியாவிடம் இருந்து தன் நாட்டை பாதுகாக்க மட்டுமே அணுசக்தியை வைத்துள்ளதாக தெரிவித்து வந்த பாகிஸ்தான், தற்போது அணு ஆயுதங்களை அதன் நட்பு நாடுகளுக்கு வழங்கும் என கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அச்சுறுத்தல்


இருப்பினும், இந்த ஒப்பந்தம் பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பில் சிக்கலான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் இந்த அறிவிப்பால், பாதுகாப்புக்காக அமெரிக்காவை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்ற தன் நிலையை சவுதி வெளிப்படுத்தி உள்ளது.

இஸ்ரேல், ஈரானிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஒரு புதிய, சக்திவாய்ந்த பாதுகாப்பை சவுதிக்கு இது கொடுக்கும் என நம்பப்படுகிறது. மேலும், முஸ்லிம் நாடுகளின் ராணுவ கூட்டணியான 'இஸ்லாமிய நேட்டோ' உருவாக்கத்திற்கான பேச்சுக்கு இது வலு சேர்ப்பதாக மாறியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us