/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/சிதற விடாமல் ஓட்டு சேகரிக்க வேண்டும் தொண்டர்களுக்கு அமைச்சர் "அட்வைஸ்'சிதற விடாமல் ஓட்டு சேகரிக்க வேண்டும் தொண்டர்களுக்கு அமைச்சர் "அட்வைஸ்'
சிதற விடாமல் ஓட்டு சேகரிக்க வேண்டும் தொண்டர்களுக்கு அமைச்சர் "அட்வைஸ்'
சிதற விடாமல் ஓட்டு சேகரிக்க வேண்டும் தொண்டர்களுக்கு அமைச்சர் "அட்வைஸ்'
சிதற விடாமல் ஓட்டு சேகரிக்க வேண்டும் தொண்டர்களுக்கு அமைச்சர் "அட்வைஸ்'
ADDED : அக் 02, 2011 12:04 AM
தஞ்சாவூர்: அ.தி.மு.க., நகர செயல் வீரர்கள் கூட்டம் தஞ்சையில் நடந்தது.
மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி செயலாளர் புண்ணியமூர்த்தி தலைமை வகித்தார். மாநில விவசாய பிரிவு தலைவர் துரை கோவிந்தராஜன், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ.,வுமான ரங்கசாமி, தமிழ்நாடு பாடநூல் கழக முன்னாள் தலைவர் தங்கமுத்து, வக்கீல் பிரிவு இணை செயலாளர் தங்கப்பன், தஞ்சை தொகுதி செயலாளர் துரை திருஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பண்டரிநாதன் வரவேற்றார். தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வைத்திலிங்கம் பேசியதாவது: முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற நான்காவது மாதத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் வந்துள்ளன. சட்டசபை தேர்தலில் இரண்டு அணியாக போட்டியிட்டோம். உள்ளாட்சி தேர்தலில் ஐந்து அணியாக போட்டியிடுகிறோம். நட்பு, ஜாதி அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலில் வாக்குகள் சிதறலாம். அவ்வாறு சிதற விடாமல் அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு வாக்குகளை சேகரிக்க வேண்டும். முதல்வர் ஜெயலலிதாவின் 100 நாள் சாதனைகளை மக்களிடம் தெரிவித்தாலேயே உள்ளாட்சி தேர்தலில் எளிதாக வெற்றி பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.
தஞ்சை நகர் மன்ற தலைவர் வேட்பாளர் சாவித்திரி, தஞ்சை தொகுதி இணை செயலாளர் சிங்காரவேல், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜேஸ்வரன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் கோபால், மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் உமாபதி,மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் அறிவுடைநம்பி, மருத்துவ பிரிவு செயலாளர் கருணாநிதி, ஜெ.,பேரவை தலைவர் விருதாசலம், இலக்கிய அணி இணை செயலாளர் சுரேஷ், முன்னாள் நகர செயலாளர்கள் பஞ்சாபிகேசன், முருகேசன், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் கலியமூர்த்தி, இளைஞரணி செயலாளர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர். உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. துணை செயலாளர் சண்முகபிரபு நன்றி கூறினார்.


