/உள்ளூர் செய்திகள்/தேனி/பெரியாறு அணையில் அதிர்வலை சோதனை மத்திய ஆராய்ச்சிக்குழு முதற்கட்ட ஆய்வுபெரியாறு அணையில் அதிர்வலை சோதனை மத்திய ஆராய்ச்சிக்குழு முதற்கட்ட ஆய்வு
பெரியாறு அணையில் அதிர்வலை சோதனை மத்திய ஆராய்ச்சிக்குழு முதற்கட்ட ஆய்வு
பெரியாறு அணையில் அதிர்வலை சோதனை மத்திய ஆராய்ச்சிக்குழு முதற்கட்ட ஆய்வு
பெரியாறு அணையில் அதிர்வலை சோதனை மத்திய ஆராய்ச்சிக்குழு முதற்கட்ட ஆய்வு
ADDED : செப் 16, 2011 11:18 PM
கூடலூர் : முல்லைப்பெரியாறு அணையின் உறுதித் தன்மையை அதிர்வலை மூலம் அறிவதற்கான முதற்கட்ட ஆய்வை மத்திய நீர்மின் ஆராய்ச்சி குழு நடத்தியது.முதன்மை ஆராய்ச்சி அலுவலர் வி.டி.தேசாய், உதவி ஆராய்ச்சி அலுவலர்கள் கோவிந்த் பன்வாக்கர், விஜய் கோடாக் கொண்ட குழு நேற்று அணைபகுதிக்கு வந்தனர்.
இவர்களுடன், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்ரமணி, மதுரை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சம்பத்குமார், பெரியாறு அணை செயற்பொறியாளர் ராஜேஷ் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.ஆய்வு: அணையின் பலம் குறித்து இரண்டு விதமான ஆய்வு நடக்க உள்ளது. முதலாவதாக, அதிர்வலை மூலம் உறுதித்தன்மை சோதனை (சோனிக் லாஜிங் டெஸ்ட்) செய்யப்பட உள்ளது. அணையின் ஒரு பகுதியில் சுத்தியலால் அடித்து, ஏற்படும் அதிர்வலையை அணையின் அடுத்த பகுதியில் பொருத்தப்பட்ட நவீன கருவி மூலம் அறிய உள்ளனர்.இரண்டாவதாக, சாயம் செலுத்தும் சோதனை (டை டெஸ்ட்) நடத்துகின்றனர்.இதன்படி அணையில் நீர்க்கசிவு உள்ளதாக கூறப்படும் பகுதியில் துளையிட்டு, சாயத்தை உட்பகுதியில் செலுத்தி ஆய்வு செய்யப்படும். இதன் மூலம் அணையின் உறுதித்தன்மையை அறிய முடியும். சோதனைகளை எந்தப்பகுதியில் நடத்தலாம் என்பது குறித்து குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.அடையாளம்: அணையின் நீளமான 1,090வது அடி, 650 வது அடி, 200 வது அடியில் சாய சோதனையும், 650வது அடியில் அதிர்வலை சோதனை செய்யும் இடத்தை அடையாளமிட்டனர். அப்பகுதியில் வரும் 26ல் நவீன தொழில்நுட்ப கருவிகளுடன் இக்குழு ஆய்வு நடத்த உள்ளது.