/உள்ளூர் செய்திகள்/தேனி/கொட்டக்குடிக்கு பஸ்,ரோடு வசதி கிராமமக்கள் கலெக்டரிடம் மனுகொட்டக்குடிக்கு பஸ்,ரோடு வசதி கிராமமக்கள் கலெக்டரிடம் மனு
கொட்டக்குடிக்கு பஸ்,ரோடு வசதி கிராமமக்கள் கலெக்டரிடம் மனு
கொட்டக்குடிக்கு பஸ்,ரோடு வசதி கிராமமக்கள் கலெக்டரிடம் மனு
கொட்டக்குடிக்கு பஸ்,ரோடு வசதி கிராமமக்கள் கலெக்டரிடம் மனு
ADDED : ஜூலை 29, 2011 11:16 PM
போடி : போடி ஊராட்சி ஒன்றியம், கொட்டகுடி ஊராட்சிக்கு கட்டுப்பட்வை குரங்கனி, முட்டம், முதுவாக்குடி, நரிப்பட்டி, கொழுக்குமலை உள்ளிட்ட மலை கிராமங்கள் அடங்கியுள்ளன.
கொட்டகுடி பகுதியில் 75 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆரம்பபள்ளி, உண்டு உறைவிடப்பள்ளியும் அமைந்துள்ளன.
போடியிலிருந்து குரங்கனி வரை மட்டுமே பஸ் வசதி உள்ளது. குரங்கனியிலிருந்து கொட்டகுடிக்கு பஸ் வசதி இல்லை. கொட்டகுடிக்கு ரோடு போடப்பட்டு பல ஆண்டுகளான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயத்திற்கான தேவையான தளவாட பொருட்களை கொண்டு செல்லவும், விளைபொருட்களை போடிக்கு கொண்டு வரவும் சிரமம் ஏற்படுகிறது. குண்டும் குழியுமாக உள்ள ரோட்டை சீரமைப்பதுடன், ரோடுக்கான பாதையை அதிகப்படுத்தி, குரங்கனி வரை வரும் பஸ்ஸை கொட்டகுடி வரை இயக்கும் வகையில் செய்திட வேண்டும். இக்கோரிக் கையை குரங்கனியில் நடந்த மனுநீதி நாள் முகாமில் மலைக்கிராம மக்கள் கலெக்டர் பழனிசாமியிடம் கூறினர்.