/உள்ளூர் செய்திகள்/திருச்சி/துறையூர் நகராட்சி 24 வார்டிலும் அ.தி.மு.க.,வினர் மனுத்தாக்கல்துறையூர் நகராட்சி 24 வார்டிலும் அ.தி.மு.க.,வினர் மனுத்தாக்கல்
துறையூர் நகராட்சி 24 வார்டிலும் அ.தி.மு.க.,வினர் மனுத்தாக்கல்
துறையூர் நகராட்சி 24 வார்டிலும் அ.தி.மு.க.,வினர் மனுத்தாக்கல்
துறையூர் நகராட்சி 24 வார்டிலும் அ.தி.மு.க.,வினர் மனுத்தாக்கல்
ADDED : அக் 01, 2011 12:24 AM
துறையூர்: துறையூர் நகராட்சி தலைவர், 24 வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க., வேட்பு மனுதாக்கல் செய்து போட்டியில் குதித்துள்ளது.
துறையூர் நகராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., வேட்பாளர் ரவி, இந்திராகாந்தி, எம்.எல்.ஏ., நகர செயலர் செக்கர் ஜெயராமன் மற்றும் கட்சி பிரமுகர்கள் உடன் வந்து நகராட்சி அலவலகத்தில் ஆணையர் மதிவாணனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தது முதல் ஒவ்வொரு வார்டாக சென்று ஆதரவு திரட்டி வருகிறார். நகராட்சியில் உள்ள 24 வார்டுகளுக்கும் அ.தி.மு.க., சார்பில் மனு செய்த வேட்பாளர்கள் விபரம்: ஒன்றாவது வார்டு - சதீஸ், இரண்டாவது வார்டு - பானுமதி அருணாசலம், மூன்றாவது வார்டு - செல்லமுத்து, நான்காவது வார்டு - சத்தியசீலன், ஐந்தாவது வார்டு - சரவணன், ஆறாவது வார்டு - திருமூர்த்தி, ஏழாவது வார்டு - மாலதி சங்கிலி, எட்டாவது வார்டு - தனம் கருப்பையா, ஒன்பதாவது வார்டு - ரெங்கராஜு, 10வது வார்டு - மணிகண்டன், 11வது வார்டு - வசந்தி, 12வது வார்டு - ரத்னகுமார், 13வது வார்டு - குமரவேல், 14வது வார்டு - ரேணுகா, 15வது வார்டு - அர்ச்சுணன், 16வது வார்டு - குருசாமி, 17வது வார்டு - ரவி, 18வது வார்டு - சுமதி சிவபொன்னன், 19வது வார்டு - காமராஜ், 20வது வார்டு - சித்ரா ராஜா, 21வது வார்டு - பாஸ்கர், 22வது வார்டு - கோபி, 23வது வார்டு - ராமசாமி, 24வது வார்டு - திவ்யா குமரவேல் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அனைவரும் தமது வார்டுகளில் தீவிரமாக ஓட்டு சேகரித்து வருகின்றனர்.