தேர்தல் கமிஷனை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அரசு நிலையானது அல்ல: கொட்டும் மழையில் மம்தா பேச்சு
தேர்தல் கமிஷனை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அரசு நிலையானது அல்ல: கொட்டும் மழையில் மம்தா பேச்சு
தேர்தல் கமிஷனை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அரசு நிலையானது அல்ல: கொட்டும் மழையில் மம்தா பேச்சு
ADDED : ஜூலை 21, 2024 03:30 PM

கோல்கட்டா: தேர்தல் கமிஷனை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அரசு நிலையான அரசு அல்ல என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார்.
மேற்குவங்கம் மாநிலம் கோல்கட்டாவில் தர்மதலா என்ற இடத்தில், தியாகிகள் தினத்தை முன்னிட்டு நடந்த பேரணியில் மம்தா பானர்ஜி மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர். அப்போது கனமழை பெய்தது. பேரணியில் மழையில் நனைந்து கொண்டே, மம்தா பானர்ஜி பேசியதாவது:
38 சதவீதம்
தேர்ந்தெடுக்கப்பட்ட 38 சதவீத பெண் எம்.பி.க்களைக் கொண்ட ஒரே கட்சி திரிணமுல் காங்கிரஸ் மட்டும் தான். தேர்தலுக்கு முன் அரசியலில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதாக பலர் கூறினர். ஆனால் அதை செய்ய முடியவில்லை. 38 சதவீதம் பெண்கள் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்த ஒரே கட்சி நாங்கள் தான். தேர்தல் கமிஷனை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அரசு நிலையான அரசு அல்ல.
விரைவில் கவிழும்
மத்தியில் பா.ஜ., ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது. இது நிலையான அரசாங்கம் அல்ல. விரைவில் கவிழும். வெட்கமற்ற அரசு அமலாக்கத்துறை, சி.பி.ஐ., உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் மற்றும் பிற வழிகளை தவறாகப் பயன்படுத்தி ஆட்சியில் தொடர்கிறது. விசாரணை அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் எங்களை ஏமாற்ற முடியாது. மேற்குவங்கம் இல்லாமல் இந்தியா இருக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.