பா.ஜ., அரசு யாரிடமும் கருத்து கேட்பதில்லை: கார்கே புகார்
பா.ஜ., அரசு யாரிடமும் கருத்து கேட்பதில்லை: கார்கே புகார்
பா.ஜ., அரசு யாரிடமும் கருத்து கேட்பதில்லை: கார்கே புகார்
ADDED : ஜூலை 21, 2024 03:51 PM

புதுடில்லி: 'பா.ஜ., அரசு யாரிடமும் கருத்து கேட்பதில்லை. அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்கிறார்கள்' என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
இது குறித்து, அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: ஜூலை 23ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு தான் பா.ஜ., அரசு எந்த மாநிலம் மக்களுக்கு என்ன கொடுத்தது என்பது அனைவருக்கும் தெரியும். பா.ஜ., அரசு யாரிடமும் கருத்து கேட்பதில்லை. அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்கிறார்கள்.
பலமுறை அவர்கள் ஒரு விஷயத்தை வாக்குறுதி அளித்தனர். ஆனால் அவர்கள் எதையும் செய்யவில்லை. பட்ஜெட் குறித்து எந்த தகவலும் எனக்கு கிடைக்கவில்லை. இது குறித்து தற்போது என்னால் கருத்து தெரிவிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.