நிபா வைரஸ்; கேரளாவில் சிறுவன் பலி
நிபா வைரஸ்; கேரளாவில் சிறுவன் பலி
நிபா வைரஸ்; கேரளாவில் சிறுவன் பலி
ADDED : ஜூலை 21, 2024 02:40 PM

திருவனந்தபுரம்: கேரளாவில் நிபா வைரசால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கேரளாவின் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்கோடு பஞ்சாயத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது, புனே தேசிய வைரலாஜி இன்ஸ்டிட்யூட் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்தச் சிறுவன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அவர்களின் குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, அந்த மாணவனுடன் தொடர்பில் இருந்தவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். அப்பகுதி மக்களையும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
அச்சப்பட வேண்டாம்
மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், யாரும் பயப்பட தேவையில்லை. தீவிரமாக கண்காணித்து வருகிறோம். பாதிக்கப்பட்டவர்களை போலீசார் உதவியுடன் தேடி வருகிறோம் என்றார்.
இதனிடையே, கோழிக்கோட்டில் நிபா வைரசால் பாதிக்கப்பட்ட 3 பேர் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.