வங்கதேசத்தில் 30 சதவீத இட ஒதுக்கீடு முறை ரத்து: உச்சநீதிமன்றம் உத்தரவு
வங்கதேசத்தில் 30 சதவீத இட ஒதுக்கீடு முறை ரத்து: உச்சநீதிமன்றம் உத்தரவு
வங்கதேசத்தில் 30 சதவீத இட ஒதுக்கீடு முறை ரத்து: உச்சநீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூலை 21, 2024 02:53 PM

டாகா: வங்கதேசத்தில் 30 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
கடந்த 1971ல் பாகிஸ்தான் ராணுவத்துடன் போரிட்டு வென்று, வங்கதேசம் தனி நாடானது. போரில் உயிர் இழந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. கடந்த 2018ல் நடந்த மாணவர் போராட்டத்தை தொடர்ந்து இட ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த மாதம் கீழமை நீதிமன்றம் இந்த இடஒதுக்கீட்டை உறுதி செய்தது. அதை மீண்டும் அமல்படுத்தப் போவதாக அரசு அறிவித்தது. இதனையடுத்து மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். இதில், ஆளுங்கட்சிக்கும், மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 133 பேர் உயிரிழந்தனர்.
இந்த இட ஒதுக்கீடு முறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், கீழமை நீதிமன்றம் உத்தரவு செல்லாது எனக்கூறி இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்லும்படி அறிவுறுத்தியது.