Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/குரு பூர்ணிமா: புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் குவிந்த பக்தர்கள்

குரு பூர்ணிமா: புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் குவிந்த பக்தர்கள்

குரு பூர்ணிமா: புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் குவிந்த பக்தர்கள்

குரு பூர்ணிமா: புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் குவிந்த பக்தர்கள்

UPDATED : ஜூலை 21, 2024 08:53 PMADDED : ஜூலை 21, 2024 12:46 PM


Google News
Latest Tamil News
புட்டபர்த்தி: ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சாய் பிரசாந்தி நிலையத்தில் குரு பவுர்ணமியை ஒட்டி, நாடு முழுவதும் இருந்து சத்யசாய் பாபாவின் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

நிகழ்ச்சிகள்


ஆண்டுதோறும் குரு பவுர்ணமியை ஒட்டி ஆந்திராவின் புட்டபர்த்தியில் உள்ள சாய் பிரசாந்தி நிலையத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த வகையில் இந்தாண்டும் இன்று சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. காலை 8:00 மணிக்கு வேதம், பிரசாந்தி பஜனை குழு சார்பில் 8:20 மணிக்கு குரு வந்தனா ஆகியவற்றுடன் நிகழ்ச்சிகள் துவங்கின.Image 1296820

அன்பு


காலை 9:00 மணிக்கு ஸ்ரீசத்ய சாய் மத்திய அறக்கட்டளை டிரஸ்டி எஸ்எஸ் நாகானந்த் வரவேற்புரை ஆற்றுகையில், சத்யசாய் போதனைகளையும், பகவத் கீதையின் முக்கிய அம்சங்களை மேற்கோள் காட்டி பேசினார்.Image 1296821

அவர் பேசியதாவது: குருபூர்ணிமா என்பது நமது குருவுக்கு நன்றி செலுத்த நமக்கு கிடைத்த சந்தர்பம் ஆகும். குருவே படைப்பாளி ஆகும் போது, குருகுலம் அற்புதமான வடிவம் எடுக்கும். அங்கு எந்தவித நுழைவுத் தேர்வும் இல்லாமல், அனைவரின் ஆர்வம் தூண்டிவிடப்படும். இதற்கு ஒரே தகுதி அன்பு மட்டுமே. சத்யசாய்பாபாவின் போதனைகளையும், அவர் காட்டிய பாதைகளையும் பக்தர்கள் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

9:10 மணிக்கு ஸ்ரீ சத்யசாய் சேவா அமைப்பின் அகில இந்திய தலைவர் நிமிஸ் பாண்டியா உரை ஆற்றினார்.

சேவை திட்டம்

Image 1296835:20க்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை திட்டத்தை ஹிமாச்சல பிரதேச கவர்னர் சிவ் பிரதாப் சுக்லா துவக்கி வைத்தார்.

சிறப்புரை


Image 1296834: 25 மணிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கவர்னர் சிவ் பிரதாப் சுக்லா நிகழ்த்திய சிறப்புரை: ஒருவர், முழு நம்பிக்கையுடன் குருவின் பாதங்களை தொழும் போது, அவரின் ஆசி முழுவதும் கிடைக்கும். சத்யசாய்பாபாவின் போதனைகள் எல்லையில்லாதது. பக்தி உள்ளிருந்து எழுந்து, கடவுளின் அருளால் அது மனதை தொடும் போது, மனிதன் தன்னுடைய உடல் உணர்வை இழக்கிறான். சத்யசாய் பாபாவின் கொள்கைகள் 140 நாடுகளில் பரவி உள்ளது. அனைவரையும் நேசித்து, அனைவருக்கும் சேவை செய்து உலகத்தை ஒற்றுமைபடுத்த வேண்டும். அனைவருக்கும் சேவை செய்வதன் மூலமும், அனைவரையும் சுதந்திரமாக்குவதன் மூலமும் வளர நாம் இங்கு வந்துள்ளோம். வாழ்க்கையில் தேவையானதை மட்டும் இறைவனிடம் இருந்து பெற வேண்டும். எல்லாம் அறிந்த கடவுள் தகுதியானதையும், தேவையானதையும் வழங்குகிறார் என்றார்.சத்யசாய் பாபாவின் வாழ்க்கையை எடுத்துக்கூறி அவரது பெயரில் செயல்படும் அமைப்பானது உலகத்தின் நலனுக்காக பணியாற்றுவதற்கு பாராட்டு தெரிவித்தார்.

9:20 க்கு தெய்வீக சொற்பொழிவு; 10:00 க்கு பஜனை, தீபாராதனை நடைபெற்றது.

ரஞ்சனி காயத்திரி குழுவின் இசை நிகழ்ச்சி


மாலை 4:30 க்கு வேதம்; 5:00க்கு, ரஞ்சனி காயத்திரி குழுவின் ஆன்மிக இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.5:45 க்கு பஜனை, தீபாராதனை காண்பிக்கப்படுகிறது.

Image 1296822நிகழ்ச்சியை ஒட்டி, சாய் பிரசாந்தி நிலையத்தில் விழாக்கோலம் பூண்டுள்ளது. குல்வந்த் அரங்கம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

Image 1296823முன் கூட்டியே குடும்பத்தினருடன் வந்துள்ள பக்தர்கள் சாய் பிரசாந்தி நிலையத்தில் தங்கி உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us