மதுரை ரயில் நிலையத்தில் தவறவிடப்பட்ட பணம் மீட்பு
மதுரை ரயில் நிலையத்தில் தவறவிடப்பட்ட பணம் மீட்பு
மதுரை ரயில் நிலையத்தில் தவறவிடப்பட்ட பணம் மீட்பு
ADDED : செப் 20, 2011 09:51 PM
மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் வியாபாரி ஒருவர் தவறவிட்ட ரூ.
1 லட்சம் பணத்தை போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர் தொழில் நிமித்தமாக, இன்றிரவு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை சென்று, அங்கிருந்து விஜயவாடா செல்வதாக இருந்தார். இந்நிலையில், ரூ. 1 லட்சத்துடன் தான் வைத்திருந்த பணப்பையை ரயில்நிலையத்தின் முதல் பிளாட்பார்மில் மறதியாக வைத்து விட்டு நாகராஜன் ரயில் ஏறியுள்ளார். ரயில் கொடைரோடு ஸடேஷனை நெருங்கிய போது, தன்னிடம் பணம் இல்லாதது கண்டு திடுக்கிட்ட அவர், இதுகுறித்து ரயில்வே போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, போலீசார் மதுரை ரயில் நிலைய முதல் பிளாட்பார்மில் தேடிய போது, பணப்பை அங்கேயே இருந்துள்ளது. இதையடுத்து, கொடைரோட்டிலிருந்து மதுரை வந்த நாகராஜன் பணத்தை மீண்டும் பெற்றுக்கொண்டார்.