Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஆமதாபாத் விமான விபத்து; கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஏர் இந்தியா ஊழியர்கள் பணிநீக்கம்

ஆமதாபாத் விமான விபத்து; கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஏர் இந்தியா ஊழியர்கள் பணிநீக்கம்

ஆமதாபாத் விமான விபத்து; கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஏர் இந்தியா ஊழியர்கள் பணிநீக்கம்

ஆமதாபாத் விமான விபத்து; கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஏர் இந்தியா ஊழியர்கள் பணிநீக்கம்

Latest Tamil News
புதுடில்லி: ஆமதாபாத் விமான விபத்துக்குள்ளான பிறகு, ஏர் இந்தியா விமான சரக்குகளை கையாளும் பிரிவு நிறுவன (AISATS) ஊழியர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, சீனியர் அதிகாரிகள் 4 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

குஜராத் ஆமதாபாத்தில் கடந்த ஜூன் 12ம் தேதி ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உலகளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விமான விபத்துகள் விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.

விமானத்தின் இரு கருப்பு பெட்டிகளும் மீட்கப்பட்டு, தரவுகள் பகுப்பாய்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஏர் இந்தியா விமானங்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த சூழலில், விமான விபத்து நடந்த பிறகு, ஏர் இந்தியாவின் சரக்குகள் கையாளும் பிரிவு நிறுவன ஊழியர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியாத நிலையில், விமான விபத்து நிகழ்ந்த ஜூன் 12ம் தேதிக்கு பிறகு தான் இது நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், 4 சீனியர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து ஏர் இந்தியாவின் சரக்குகள் கையாளும் பிரிவு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 'விமான விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு துணை நிற்கிறோம். அண்மையில் வெளியான வீடியோவுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறோம். இந்த நடத்தை எங்களை மதிப்பிடாது. இதில், தொடர்புடையவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனுதாபம் மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றுக்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம்,' இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us