/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/காலாண்டு தேர்வு நெருங்கியது மலையாள பாடபுத்தகம் தட்டுபாடுகாலாண்டு தேர்வு நெருங்கியது மலையாள பாடபுத்தகம் தட்டுபாடு
காலாண்டு தேர்வு நெருங்கியது மலையாள பாடபுத்தகம் தட்டுபாடு
காலாண்டு தேர்வு நெருங்கியது மலையாள பாடபுத்தகம் தட்டுபாடு
காலாண்டு தேர்வு நெருங்கியது மலையாள பாடபுத்தகம் தட்டுபாடு
ADDED : செப் 09, 2011 12:42 AM
மார்த்தாண்டம் : காலாண்டு தேர்வு நெருங்கிய நிலையிலும் மலையாள பாட புத்தகம் வினியோகம் செய்யப்படாததால் மாணவ, மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இந்த ஆண்டு சமச்சீர் கல்வி திட்டம் கோர்ட் உத்தரவுப்படி அமல்படுத்தப்பட்டது. பள்ளிகள் திறந்து சுமார் இரண்டு மாதம் கடந்த பின் புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம், குழித்துறை, குலசேகரம், களியக்காவிளை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான மலையாள மொழி பேசும் மக்கள் உள்ளனர். இவர்களது குழந்தைகள் மலையாளத்தை தாய் மொழியாக கொண்டு பயின்று வருகின்றனர். ஆனால் மலையாள மொழி பாட புத்தகங்கள் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை. காலாண்டு தேர்வு நெருங்கி வரும் நிலையில் புத்தகம் வினியோகம் செய்யப்படாததால் மாணவ, மாணவியர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் பாஸி கூறியதாவது: காலாண்டு தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் மலையாள வழியில் பயின்று வரும் மாணவர்களுக்கு மலையாள மொழி பாடபுத்தங்கள் வழங்கப்படாத நிலை நீடிக்கிறது. இதை போல் ஆங்கில மீடியம் படிக்கும் மலையாள பாட புத்தகங்களும் கிடைக்கவில்லை. இது மாணவர்களுக்கு மட்டும் இல்லாமல் பெற்றோர்களுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளோம். இவ்வாறு பாஸி தெரிவித்தார்.