Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சேலம் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., குழு தலைவரை அறைந்த பெண் கவுன்சிலர்

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., குழு தலைவரை அறைந்த பெண் கவுன்சிலர்

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., குழு தலைவரை அறைந்த பெண் கவுன்சிலர்

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., குழு தலைவரை அறைந்த பெண் கவுன்சிலர்

Latest Tamil News
சேலம்: சேலம் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., குழு தலைவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று (மே 29) கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தி.மு.க, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளிட்ட பல கட்சிகளின் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு பேசினர்.

அப்போது அ,தி,மு,க, மாமன்றக் குழு தலைவரும், கவுன்சிலருமான யாதவ மூர்த்தி என்பவர் எழுந்து பேச முயன்றார். அதேநேரத்தில் தி.மு.க., கவுன்சிலரான சுகாசினி என்பவர் குறுக்கிட்டார். இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் எழுந்தது.

வாக்குவாதம் மோதலாக மாற, இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். யாதவ மூர்த்தியை, பெண் கவுன்சிலர் கன்னத்தில்அறைந்தார். இருதரப்பும் இடையே எழுந்த கைகலப்பால் அங்கு அசாதாரண சூழலும், குழப்பமும் உருவானது.

தி.மு.க. கவுன்சிலரின் நடவடிக்கையை கண்டித்து அ.தி.மு.க.வினர் மேயர் இருக்கை முன்பு சென்று தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக மாநகராட்சி கூட்ட அரங்கில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us