ADDED : செப் 07, 2011 10:28 PM
திண்டிவனம்:திண்டிவனத்தில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது
செய்தனர்.திண்டிவனம் கிடங்கல் பகுதியை சேர்ந்த செல் வராஜ் மகன் ஜெகன், 30.
இவர், கிடங்கல் 2 பகுதியில் உள்ள ஏரிக்கரையில் கடந்த 5ம் தேதி சாராயம்
விற்றுக் கொண்டிருந்தார்.தகவலறிந்த இன்ஸ்பெக்டர் சுதாகர், சப் இன்ஸ்
பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று ஜெகனை கைது செய்து
அவரிடமிருந்து 120 லிட்டர் எரிசாராயமும், 100 கிராம் கஞ்சாவும் பறிமுதல்
செய்யப்பட்டது.