Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கள்ளச்சாராய விவகாரத்தில் பெரும்புள்ளிகளுக்கு தொடர்பு: இ.பி.எஸ்., மீண்டும் குற்றச்சாட்டு

கள்ளச்சாராய விவகாரத்தில் பெரும்புள்ளிகளுக்கு தொடர்பு: இ.பி.எஸ்., மீண்டும் குற்றச்சாட்டு

கள்ளச்சாராய விவகாரத்தில் பெரும்புள்ளிகளுக்கு தொடர்பு: இ.பி.எஸ்., மீண்டும் குற்றச்சாட்டு

கள்ளச்சாராய விவகாரத்தில் பெரும்புள்ளிகளுக்கு தொடர்பு: இ.பி.எஸ்., மீண்டும் குற்றச்சாட்டு

ADDED : ஜூன் 27, 2024 05:20 PM


Google News
Latest Tamil News
சென்னை: ‛‛ கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் பெரும்புள்ளிகளுக்கு தொடர்பு உள்ளது '', என எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., பேசினார்

சட்டசபை கூட்டத்தொடரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

ஏன்?


இந்த போராட்டத்தை நிறைவு செய்து இ.பி.எஸ்., பேசியதாவது: கள்ளச்சாராய மரணம், இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு நெஞ்சை பதற வைத்தது. இந்த மரணங்களுக்கு தி.மு.க., அரசே காரணம். இச்சம்பவம் தொடர்பாக விவாதிக்க அனுமதி கேட்டோம். ஆனால், சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். கள்ளச்சாராய மரணம் குறித்து பேச மறுப்பது ஏன்?

கடமை


மக்கள் பாதிக்கப்படும் போது அதனை சட்டசபையில் எதிரொலிக்க வேண்டும். அதுதான் பிரதான எதிர்க்கட்சிகளின் கடமை. அதனை தான் நாங்கள் செய்கிறோம். கள்ளக்குறிச்சி சம்பவத்தை நாங்கள் எழுப்பினால், எங்களை வெளியே அனுப்பிவிட்டு முதல்வர் 15 நிமிடம் பதிலளிக்கிறார். எங்களுக்கு ஒரு நியாயம். ஆளுங்கட்சிக்கு ஒரு நியாயமா? எதிர்க்கட்சிகள் பேசவிட்டுவிட்டு அதை குறிப்பு எடுத்தால் நல்ல அரசுக்கு அடையாளம். அ.தி.மு.க., ஆட்சியில் இருந்த போது, எதிர்க்கட்சிகள் பேச முறையாக அனுமதி வழங்கினோம்.

சர்வாதிகார ஆட்சி


3 ஆண்டுகளாக அ.தி.மு.க.,வினர் பேச 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே அனுமதி வழங்குகிறார்கள். எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்கும் சர்வாதிகார ஆட்சியாக திமுக அரசு செயல்படுகிறது. மக்கள் விரோத ஆட்சி நடத்தும் தி.மு.க., மீண்டும் படுதோல்வி அடையும்.எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நசுக்குகிறார்கள். மக்கள் பிரச்னையை சட்டசபையில் எடுத்துரைக்க வேண்டும் என கேட்டோம்.

எதிர்க்கட்சி தலைவர் அவையில் இருந்தால், முதல்வர் கிழி கிழி என கிழித்துவிடுவார் என அமைச்சர் கூறுகிறார். அவர் பேப்பரை தான் கிழித்து இருப்பார். கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக என்னை அவையில் பேச விட்டு இருந்தால் கிழி கிழி என கிழித்து இருப்பேன்.

கண்ணை மறைக்கிறது


தி.மு.க.,வுக்கு அதிகார போதை கண்களை மறைக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் பேசுகிறீர்கள். காலச்சக்கரம் ஒரு நாள் மேலே வந்து தீரும். தமிழக அரசின் கீழ் உள்ள சி.பி.சி.ஐ.டி., விசாரித்தால் உண்மை வெளிவராது. இதனால், தான் சி.பி.ஐ., விசாரணை கோருகிறோம். சி.பி.ஐ., விசாரித்தால் தாமதமாகும் என்கிறார்கள். எங்கே தாமதமாகி உள்ளது.

வருத்தம்

கள்ளக்குறிச்சி மக்களை சந்திக்க முதல்வர் அஞ்சுகிறார். கேள்வி கேட்பார்கள் என்பதால் முதல்வர் அங்கு செல்லவில்லை. கள்ளச்சாராய விவகாரத்தில் பெரும் புள்ளிகளுக்கு தொடர்பு உள்ளது. தி.மு.க., அரசில் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டு உள்ளது. சபாநாயகர் நடுநிலையாக செயல்படாதது வருத்தம் அளிக்கிறது. மக்கள் பிரச்னையில் அதிமுக அரசியல் செய்யாது. திமுக தான் நாடகமாடும். சி.பி.ஐ., விசாரணை கோரி மனு அளித்தோம். பரிசீலனை செய்து முடிவெடுப்பதாக கவர்னர் கூறியுள்ளார். இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us