லாரி ஸ்டிரைக்: ஷா மில் தொழில் முடங்கியது : ரயிலில் காய்கறி
லாரி ஸ்டிரைக்: ஷா மில் தொழில் முடங்கியது : ரயிலில் காய்கறி
லாரி ஸ்டிரைக்: ஷா மில் தொழில் முடங்கியது : ரயிலில் காய்கறி
மேட்டுப்பாளையம் : தொடர் லாரி ஸ்டிரைக்கால் மேட்டுப்பாளையத்தில் ஷா மில் தொழில் முடங்கியது; இதை நம்பியுள்ள 2,500 தொழிலாளர்கள் வேலையிழந்தனர்.
ஷா மில் உரிமையாளர்கள் சங்க தலைவர் பாஸ்கர் கூறியது: லாரி ஸ்டிரைக்கால் வெளியூர்களில் இருந்து மரலோடு வரத்து முற்றிலும் நின்று விட்டது, மில்லில் அறுத்து அடுக்கி வைத்துள்ள பலகைகளும், அனுப்ப முடியாமல் அப்படியே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இத்தொழில் முடங்கியதால், இதை நம்பியுள்ள தொழிலாளர் வேலை இழந்துள்ளனர். மொத்தமாக 20 லிருந்து 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரப்பலகைகள் தேங்கியுள்ளன, என்றார்.
மேட்டுப்பாளையத்துக்கு நீலகிரி மற்றும் கர்நாடகாவிலிருந்து லாரி மற்றும் வேன்களில் காய்கறிகள், உருளைக்கிழங்கு வருகின்றன. இங்கிருந்து கேரளாவுக்கு எவ்வித தடையுமில்லாமல் லாரிகள் செல்கின்றன. தமிழகத்தில் சென்னைக்கு லாரிகள் செல்லாததால், காய்கறி, கிழங்கு ஆகியவற்றை மூட்டைகள் மற்றும் பெட்டிகளில் அடுக்கி, நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் அனுப்பப்படுகின்றன.
இது குறித்து மேட்டுப்பாளையம் காய்கறி வர்த்தக சங்க செயலர் பத்திரப்பன் கூறுகையில்,''நேற்று கேரட் 2,500 மூட்டைகள், பீட்ரூட் 600, பீன்ஸ் 500 மூட்டைகள், முட்டைக்கோஸ் 7 லோடுகள் வந்தன. காலையில் விலை சற்று உயர்வாக இருந்தது; மதியம் அதிகமான லோடு வந்ததால், விலை குறைந்தது. ஒரு கிலோ கேரட் 12 லிருந்து 17 ரூபாய், பீட்ரூட் 10 லிருந்து 15, பீன்ஸ் 10 லிருந்து 15, முட்டைக்கோஸ் 5 லிருந்து 6, முள்ளங்கி 5 லிருந்து 6 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு வழக்கம் போல் காய்கறிகள் லாரி மற்றும் டெம்போக்களில் செல்கின்றன,'' என்றார்.