/உள்ளூர் செய்திகள்/தேனி/போடி மலைப்பாதையில் பள்ளத்தில் வேன் உருண்டது : ஒருவர் பலி 16 பேர் காயம்போடி மலைப்பாதையில் பள்ளத்தில் வேன் உருண்டது : ஒருவர் பலி 16 பேர் காயம்
போடி மலைப்பாதையில் பள்ளத்தில் வேன் உருண்டது : ஒருவர் பலி 16 பேர் காயம்
போடி மலைப்பாதையில் பள்ளத்தில் வேன் உருண்டது : ஒருவர் பலி 16 பேர் காயம்
போடி மலைப்பாதையில் பள்ளத்தில் வேன் உருண்டது : ஒருவர் பலி 16 பேர் காயம்
ADDED : ஆக 14, 2011 02:33 AM
போடி : போடிமெட்டு மலைப்பகுதியில் 200 அடி பள்ளத்தில் வேன் உருண்டதில் ஒருவர் இறந்தார்.
16 பேர் படுகாயமடைந்தனர்.
தேனி மாவட்டம், போடியிலிருந்து 18 கி.மீ., தொலைவில் மூணாறு செல்லும் பாதையில் போடிமெட்டு மலைப்பகுதி அமைந்துள்ளது. குலாளர்பாளையத்தை சேர்ந்த மகாராஜ் (50) போடியிலிருந்து பொதுமக்களை மகிந்திரா வேனில் ஏற்றி கொண்டு மூணாறு சென்றார். போடிமெட்டு புலிகுத்தி அருகே மதியம் 3 மணிக்கு வேன் சென்றபோது, எதிரே வந்த பஸ்சிற்காக வழிவிட முயன்றார். இடதுபுறம் 200 அடி பள்ளத்தில் வேன் உருண்டது. வேனில் பயணம் செய்த ரங்கநாதபுரத்தை சேர்ந்த ஏலக்காய் வியாபாரி கண்ணன்(50) சம்பவ இடத்திலேயே இறந்தார்.
16 பேர் காயம்: டிரைவர் மகாராஜ் (50), போடி முருகன்(38), அஜ்மல்கான் (50) உட்பட 16 பேர் காயமடைந்தனர். எஸ்.பி., பிரவின்குமார் அபினபு தலைமையில் போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் பொது மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு போடி மற்றும் தேனி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இவர்களை அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் சந்தித்து ஆறுதல் கூறினார். குரங்கனி போலீசார் விசாரித்து வருகின்றனர். மீட்பு பணியால் போடி-மூணாறு பாதையில் 2 மணி நேர போக்குவரத்து பாதிக்கப்பட்டது.