நீட் தேர்வு ஒத்திவைப்பால் டாக்டர்கள் விரக்தி: முதல்வர் ஸ்டாலின்
நீட் தேர்வு ஒத்திவைப்பால் டாக்டர்கள் விரக்தி: முதல்வர் ஸ்டாலின்
நீட் தேர்வு ஒத்திவைப்பால் டாக்டர்கள் விரக்தி: முதல்வர் ஸ்டாலின்
ADDED : ஜூன் 23, 2024 11:03 AM

சென்னை: ‛‛ இன்று( ஜூன்23) நடைபெற இருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது, ஆயிரக்கணக்கான டாக்டர்களை விரக்தி அடைய செய்துள்ளது'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: யுஜிசி நெட் தேர்வை தொடர்ந்து, முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது ஆயிரக்கணக்கான டாக்டர்களை விரக்தியில் தள்ளிஉள்ளது.
எனவே, தொழில்முறை படிப்புகளுக்கு நியாயமான மற்றும் சமமான தேர்வு செயல்முறையை உருவாக்குவதற்கும் பள்ளிக்கல்வியின் முக்கியத்துவத்தை உறுதி செய்து, அதை வாழ்க்கைக்கு அடித்தளமாக மாற்றுவதற்கும்,
தொழில்முறை படிப்புகளுக்கான தேர்வு செயல்முறையை தீர்மானிக்க மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவும்,
நமது மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் மனதில் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பை நிறுவுவதற்கும், நாம் இணைந்து செயல்படுவோம். இவ்வாறு அந்த பதிவில் ஸ்டாலின் கூறியுள்ளார்.