Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கன்னியாகுமரி ரயில் நிலைய பராமரிப்பு பணி : ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம்

கன்னியாகுமரி ரயில் நிலைய பராமரிப்பு பணி : ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம்

கன்னியாகுமரி ரயில் நிலைய பராமரிப்பு பணி : ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம்

கன்னியாகுமரி ரயில் நிலைய பராமரிப்பு பணி : ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம்

ADDED : ஆக 13, 2011 12:54 AM


Google News
Latest Tamil News

சென்னை : கன்னியாகுமரி ரயில் நிலைய மேம்பாட்டுப் பணி நடப்பதால், வரும் 15ம் தேதி முதல், 30ம் தேதி வரை, ரயில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணி, யார்டு பணி உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளன. இதற்காக, நாகர்கோவில் சந்திப்பு முதல் கன்னியாகுமரி வரை, ரயில் போக்குவரத்து, வரும் 15ம் தேதி முதல், 30ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது.



* நாகர்கோவில் சந்திப்பு-கன்னியாகுமரி வரை இயங்கும், பாசஞ்சர் ரயில் (56325), 15ம் தேதி முதல், 30ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

* கன்னியாகுமரி - திருநெல்வேலி பயணிகள் ரயில்(56321), நாகர்கோவில் சந்திப்பு வரை இயங்கும்.

* நாளை, 14ம் தேதி, மும்பை-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் (16381), நாகர்கோவில் சந்திப்பு வரை இயங்கும். அதன் பின்னர், பயணிகள் சாலை வழியாகச் செல்ல ஏற்பாடு செய்யப்படும்.

* வரும், 15, 22 மற்றும் 29ம் தேதி இயக்கப்படும், நிஜாமுதீன்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில், 17, 24ம் தேதி இயக்கப்படும் அவுரா-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில்(12665), நாகர்கோவில் சந்திப்பு வரை இயங்கும். பயணிகள் கன்னியாகுமரி செல்ல, மாற்று ஏற்பாடு செய்யப்படும்.

* வரும் 17, 24ம் தேதி இயக்கப்படும் கன்னியாகுமரி-நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயில் (12641), நாகர்கோவில் சந்திப்பில் இருந்து புறப்படும். எனவே, பயணிகள், கன்னியாகுமரியில் இருந்து, நாகர்கோவில் சந்திப்பு வரை, சாலை வழியாக அழைத்துச் செல்லப்படுவர்.

* வரும் 19, 26ம் தேதி இயக்கப்படும் கன்னியாகுமரி-ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் ரயில் (16317), நாகர்கோவில் சந்திப்பில் இருந்து புறப்படும். வரும் 20, 27ம் தேதி கன்னியாகுமரி-அவுரா எக்ஸ்பிரஸ் (12666), நாகர்கோவிலில் இருந்து புறப்படும். கன்னியாகுமரியில் இருந்து, நாகர்கோவில் வரை பயணிகள் வருவதற்கு, மாற்று ஏற்பாடு செய்யப்படும். மேற்கண்ட தகவலை, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us