ADDED : ஜூலை 14, 2011 11:43 PM
காரிமங்கலம்: காரிமங்கலம் யூனியன் அனுமந்தபுரம் பஞ்சாயத்தில், பழுதடைந்த நீர்தேக்க தொட்டியை சீரமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரிமங்கலம் யூனியன் அனுமந்தபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட சொர்ணம்பட்டி கிராமத்தில், பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டியிலிருந்து குடிநீர் விநியோம் செய்யப்படுகிறது. மேல்நிலை தொட்டி கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்துள்ளது. மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மேல்புறம் பெரிய அளவில் சேதமடைந்து கான்கிரீட் கம்பிகள் வெளிய தெரியுமளவிற்கு சேதமடைந்துள்ளது. மேலும் குடிநீர் பைப் லைன் மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால் குடிநீருடன் சாக்கடை நீரும் கலந்து வருவதால் பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். பழுதடைந்த நீர்தேக்க தொட்டியையும், பைப் லைனையும் சீரமைக்க பலமுறை பஞ்சாயத்து நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என புகார் தெரிவித்த பொதுமக்கள் இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.