ADDED : செப் 06, 2011 11:40 PM
விருதுநகர் : விருதுநகர் அருகே ரூ.32 ஆயிரம் மதிப்புள்ள கருந்திரிகளை கடத்தி சென்ற இருவர் கைதுசெய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.விருதுநகர் வச்சகாரட்டி அருகே மன்னார்கோட்டையில் போலீசார் வாக சோதனை நடத்தினர்.
அப்போது, ராமலிங்காபுரம் முனியசாமி, 20, டாடா ஏய்சி வாகனத்தில் கருந்திரி கொண்டு வந்தார். ஆவுடையாபுரம் ரயில்வே கேட் அருகே தாயில்பட்டி இந்திரா நகரை சேர்ந்த மணிகண்டன்,26, போடு ஆட்டோவில் ரூ.32 ஆயிரம் மதிப்புள்ள கருந்திரிகளை ஏற்றி வந்தார். இருவரையும் வச்சகாரபட்டி போலீசார் கைது செய்து, வாகனத்தை பறிமுதல் செய்தனர்.