20 ஆயிரம் சதுரடியில் 20 டன் பூக்களால் ஓண பூக்கோலம் அமைக்க தீவிரம்
20 ஆயிரம் சதுரடியில் 20 டன் பூக்களால் ஓண பூக்கோலம் அமைக்க தீவிரம்
20 ஆயிரம் சதுரடியில் 20 டன் பூக்களால் ஓண பூக்கோலம் அமைக்க தீவிரம்
ADDED : செப் 01, 2011 11:52 PM

கண்ணூர் : ஓணம் பண்டிகையை ஒட்டி, கண்ணூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வரும் 17ம் தேதி, 20 ஆயிரம் சதுரடி பரப்பளவில், 20 டன் பூக்களால் ஓணப் பூக்கோலம் வரைய, பணிகள் தீவிரமடைந்து வருகின்றன.
கேரள மாநிலம் கண்ணூரில், குளோபர்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் தனியார் நிறுவனம் சார்பில், ஓணம் பண்டிகையை ஒட்டி, 20 டன் பூக்களைப் பயன்படுத்தி மெகா பூக்கோலம் வரைய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கண்ணூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 20 ஆயிரம் சதுரடி இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக பூக்கள், தமிழகத்தின் மதுரை உட்பட பல பகுதிகளில் இருந்து தருவிக்கப்பட உள்ளது. ஏழு வண்ணப் பூக்கள் இம்முயற்சிக்காக பயன்படுத்தப்படும். கின்னஸ் சாதனைக்காக இம்முயற்சியில் பலரும் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பெயர் வைக்க, பொதுமக்களிடம் இருந்து ஆலோசனைகள் வரவேற்கப்படுவதாக இதன் அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.