திருச்சி தொகுதிக்கு அ.தி.மு.க., வேட்பாளர் அறிவிப்பு
திருச்சி தொகுதிக்கு அ.தி.மு.க., வேட்பாளர் அறிவிப்பு
திருச்சி தொகுதிக்கு அ.தி.மு.க., வேட்பாளர் அறிவிப்பு
UPDATED : செப் 16, 2011 12:40 PM
ADDED : செப் 16, 2011 12:29 PM
திருச்சி : திருச்சி மேற்கு தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் பரஞ்சோதி போட்டியிட உள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் அ.தி.மு.க.சார்பில் மரியம் பிச்சை போட்டியிட்டுவெற்றி பெற்றார். அமைச்சராக நியமிக்கப்பட்ட அவர் சென்னை செல்லும் வழியில் கார் விபத்தில் பலியானார். இதனையடுத்து இத்தொகுதிக்கான தேர்தல் அக்டோபர் 13-ம் தேதி என அறிவிக்கப்பட்டது. 2006-2011 காலகட்டத்தில் ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த பரஞ்சோதி தற்போது நடைபெற உள்ள திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஜெ.,போட்டியிட்ட ஸ்ரீரங்கம் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.