வேல் யாத்திரைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி மறுப்பு
வேல் யாத்திரைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி மறுப்பு
வேல் யாத்திரைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி மறுப்பு
ADDED : மார் 25, 2025 05:40 AM

புதுடில்லி: சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கேட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பாரத் ஹிந்து முன்னணி என்ற அமைப்பு சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மதுரை திருப்பரங்குன்றம் மலையில், ஹிந்து கடவுளான முருகனின் கோவில் அமைந்துள்ளது. ஆனால், இந்த மலையை இஸ்லாமியர்கள் உரிமை கொண்டாடுகின்றனர். எனவே, திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க, சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கு எதிராக மனுதாரர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.