/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஆயுர்வேத மருத்துவ கண்காட்சி இன்று நிறைவுஆயுர்வேத மருத்துவ கண்காட்சி இன்று நிறைவு
ஆயுர்வேத மருத்துவ கண்காட்சி இன்று நிறைவு
ஆயுர்வேத மருத்துவ கண்காட்சி இன்று நிறைவு
ஆயுர்வேத மருத்துவ கண்காட்சி இன்று நிறைவு
ADDED : செப் 04, 2011 01:20 AM
மதுரை : மதுரை தமுக்கம் மைதானத்தில் ஆயுர்வேத மருத்துவ கண்காட்சி இன்று நிறைவு பெறுகிறது.
நேஷனல் ஆயுர்வேதிக் டிரஸ்ட் அண்ட் ரிசர்ச் பவுண்டேஷன் சார்பில், காலை 10.30 முதல் மாலை 6 மணி வரை இக்கண்காட்சி நடைபெறுகிறது. இதில் 35க்கும் மேற்பட்ட அரங்கங்கள் உள்ளன. இலவச அனுமதி, மருத்துவ ஆலோசனை உண்டு. கண்காட்சியை டாக்டர் கார்த்திக்வேல் திறந்து வைத்தார். டாக்டர் பிரேம்வேல் குத்துவிளக்கேற்றினார். பஞ்சகர்மா அரங்கத்தை டாக்டர் பிரசன்ன குமாரும், அனைத்திந்திய ஆயுர்வேத கூட்டமைப்பு அரங்கத்தை டாக்டர் பிரவீன்குமாரும், இலவச மருத்துவ ஆலோசனை அரங்கத்தை டாக்டர் ராகவனும் திறந்து வைத்தனர்.டாக்டர்கள் சரவணன், ராம்குமார், ரமேஷ், வீரபுத்திரசிங், கணேஷ், அழகர்சாமி, நெப்போலியன், கருப்பையா கலந்து கொண்டனர். உலக மக்களின் ஆரோக்கியத்துக்காக இன்று காலை 10.30 மணிக்கு தன்வந்திரி ஹோமம் நடைபெற உள்ளது.