Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பாளை., கே.டி.சி நகரில் விரைவில் புதிய ரேஷன் கடை

பாளை., கே.டி.சி நகரில் விரைவில் புதிய ரேஷன் கடை

பாளை., கே.டி.சி நகரில் விரைவில் புதிய ரேஷன் கடை

பாளை., கே.டி.சி நகரில் விரைவில் புதிய ரேஷன் கடை

ADDED : ஜூலை 31, 2011 01:56 AM


Google News
திருநெல்வேலி : பாளை கே.டி.சி நகரில் விரைவில் புதிய ரேஷன் கடை செயல்படுகிறது.பாளை கே.டி.சி நகர் வட பகுதியில் சமுதாய நலக் கூடம் அருகே பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 3 லட்சம் புதிய ரேஷன் கடை கட்ட முடிவு செய்யப்பட்டது. இதன்படி மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து3 லட்சம் ஒதுக்கப்பட்டு கட்டடம் கட்ட பூமி பூஜை நடந்தது.மாவட்ட பஞ்., கவுன்சிலர் பரமசிவ ஐயப்பன், கீழநத்தம் பஞ்., தலைவர் சந்திரன் ஆகியோர் பூமி பூஜையை துவக்கி வைத்தனர். இதில் வேளாண் விற்பனை குழு தலைவர் கணேசன், திமுக ஒன்றிய இளைஞரணி நிர்வாகி சண்முகவேல், உதவி இன்ஜினியர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர்.கே.டி.சி நகர் வட பகுதி பொது நல சங்க தலைவர் சுப்பையா, துணை தலைவர் நாசர், செயலாளர் முத்தையா, அரசு விரைவு போக்குவரத்து கழக தேமுதிக தொழிற்சங்க மாநில துணை செயலாளர் ஜெய சாமுவேல், கல்லத்தியான், செல்லம், துரை சுப்பிரமணி, ராஜா, சீனிவாசன், விஜயமுருகன், ராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆக.5ம் தேதி உணவுப் பாதுகாப்பு ஆணையரகம் உதயம் உணவுப் பாதுகாப்பு சட்டம் தீவிரமாக அமல்படுத்த முடிவு : கலப்படம் செய்தால் குறைந்தபட்ச அபராதம் ரூ.50 ஆயிரம்

தமிழகத்தில் உணவு பாதுகாப்பு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த உணவு பாதுகாப்பு ஆணையரகம் வரும் 5ம் தேதி முதல் செயல்படவுள்ளது. உணவுப் பொருட்களில் கலப்படம் செய்தால் குறைந்தபட்சமாக ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.உணவுப் பொருட்களில் கலப்படம், காலாவதியான உணவுகள், தரம் குறைந்த உணவுப்பொருட்கள், கெட்டுப்போன உணவுகளை விற்பனை செய்தல், உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் உணவுப் பொருட்களை விற்பனை செய்தல் போன்றவற்றை தடுக்க உணவு கலப்பட தடைச்சட்டம் கடந்த 1954ம் ஆண்டு இயற்றப்பட்டது. உணவுப் பொருட்களில் கலப்படம் செய்தால் பொதுசுகாதாரத்துறை இயக்குனர் தலைமையின் கீழ் செயல்படும் உணவு கலப்பட தடைச் சட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.இந்த சட்டத்தில் உள்ள சில குறைபாடுகளை சரிசெய்து 2006ம் ஆண்டு மத்திய அரசு உணவு பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்தது. புதிய சட்டத்தின் கீழ் உணவு பாதுகாப்பு விதிகள் ஏற்படுத்தப்பட்டன. புதிய சட்டத்தில் உருவாக்கப்பட்ட உணவு பாதுகாப்பு விதிகள் அரசு இதழிலில் (கெஜட்டில்) கடந்த மே 5ம் தேதி வெளியிடப்பட்டன. உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் மூன்று மாதத்திற்கு பிறகு அதாவது வரும் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.இதற்கிடையே புதிய சட்ட விதிகள் சம்பந்தமாக மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் உணவு ஆய்வாளர்களாக பணியாற்றும் 350 சுகாதார ஆய்வாளர்களுக்கு தமிழக அரசு சிறப்பு பயிற்சியும் அளித்தது. சுகாதார ஆய்வாளர்களுக்கு தனியாக பயிற்சி அளிக்கப்பட்டது.உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளதால் ஒவ்வொரு மாநிலத்திலும் உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த உணவு பாதுகாப்பு ஆணையரகம் ஏற்படுத்தி உணவு பாதுகாப்பு ஆணையர் என்ற பதவியின் கீழ் அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி உணவு பாதுகாப்பு ஆணையரின் தலைமையின் கீழ் உணவு பாதுகாப்பு இணை ஆணையர், துணை ஆணையர், உணவு பாதுகாப்பு அலுவலர்களை நியமித்து சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.முன்பெல்லாம் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வோருக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும், 6 மாதம் சிறைத் தண்டனையும் மட்டுமே விதிக்க முடியும். தற்போது இயற்றப்பட்டுள்ள சட்டத்தின் படி குறைந்த பட்ச அபராதம் ரூ.50 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக லட்சக்கணக்கில் அபராதமும், சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.உணவு பாதுகாப்பு ஆணையர் யார்?.தமிழகத்தில் இந்த சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி உணவு பாதுகாப்பு ஆணையர் பதவிக்கு யாரை நியமிக்கலாம் என அரசு யோசனை செய்துவருகிறது. ஐ.ஏ.எஸ்., உயர் அதிகாரி ஒருவரை நியமிக்கலாமா அல்லது போலீசில் டி.ஜி.பி.பதவியில் உள்ள ஒருவரை உணவு பாதுகாப்பு ஆணையராக நியமிக்கலாமா என்பது குறித்தும் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us